பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆

லா. ச. ராமாமிருதம் * 9i

வாழ்க்கையின் முகமே மாறிப் போச்சு. நடப்பதைப் பாருமைய்யா! நின்று நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு எங்களுக்கு நேரமில்லை.

அவர்கள் சொல்வதும் சரிதானே? மேகங்கள் வேகவேகமாய் சரசரக்கின்றன. காற்று அடித்து வீசுகிறது. ஆனால் ஒரு சொட்டு சாரல்கூட தூறாமல் ஏமாற்றுகிறது. நாட்கள் ஏமாற்றிக்கொண்டு கழிகின்றன.

பொட்டுப் பொட்டென மனிதர்கள் விழ ஆரம்பித்தனர். அவர்கள் உரிய வேளையில் வீழ்ந்தனர். எனினும் இந்த அளவுகூட இதுவரை சாய்ந்ததில்லை. ஆனால் சுருக்காக எனக்குப் பட்டது. அதுவரை மறைவுகள் எனக்குப் பழக்க மில்லை. ஆனால் சாவு எப்போதுதான் யாருக்குப் பழக்க மாகிறது.

முதலில் நொண்டி குருக்கள். வைத்தியின் அப்பா. ஒரிரவு தூக்கத்தில் விடும் மூச்சே உயிர் பிரியுமுன் திண்டாடும் சுவாசமாக மாறிவிட்டதை என்ன சொல்ல?

ஐயன்பேட்டையிலிருந்து ஆள் வந்ததும் (அப்போ எல்லாம் ஆள் அனுப்புவதுதான் வழக்கம். கிராமத்தில் தந்தி அத்தனை பழக்கம் கிடையாது) நான் போகவில்லை. அதைப் பத்தித் தப்பா யாரும் நினைக்கவில்லை. அதுதான் அந்தக்காலக் கிராமம்.

அடுத்து பொதி குருக்கள். கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்தவர் வாட்டசாட்டமாயிருந்தவர். மூன்றே நாட்கள் ஜூரத்தில் ஆள் காலி.

பிறகு குள்ள குருக்கள். அறுபது வயது சாந்தி செய்து கொண்டு அவர் மேல் கொட்டின அறுபது குடம் தண்ணிரில் மாரில் சளிகட்டி.