பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 * செளந்தர்ய.

நான் இவைகளுக்கெல்லாம் போகவில்லை. அதுபற்றி அவர்களெல்லாம் என்ன நினைத்துக்கொண்டார்களோ வெளியிட மாட்டார்கள். அதுதான் கிராமம்.

பிறகு என் தலையிலேயே இடி விழுந்தது. அண்ணா படுத்துக் கொண்டவர் தலை தலையணையில் ஒரு பக்கமாய் சாய்ந்தது. அத்துடன் சரி.

அத்துடன் எங்கள் குடும்பம் பெயர்ந்து, பட்டனத்திற்கு வந்ததுதான். அம்மா அவள் ஆயுசுக்கும் எது காரணம் பற்றியும் ஐயன்பேட்டை போகவில்லை. .

என் கலியாணத்திற்கு வைத்தியும் விசாலமும் வந்தார்களோ ஞாபகமில்லை. வந்திருந்தாலும் அன்று மதியமே திரும்பியிருப்பார்கள்.

எப்போதேனும் அபூர்வமாக ஐயன்பேட்டைக்கு விஜயம் செய்வேன். திரும்புவது கஷ்டமாயிருந்தாலும் ரொம்ப நாழி ஐயன்பேட்டையை நினைக்க முடியாது.

என் எழுத்தில் முனைந்துவிட்டேன். உத்யோகம் வீட்டுக்குக் கடமையைச் செலுத்த எழுத்து என் எழுச்சிக்கு வடிகால் தேட இனம் கண்டு கொண்டபிறகு என்னென்ன பரீrை செய்யலாம்?

திருவல்லிக்கேணி கடற்கரையோரமாய் எலியட்ஸ் பீச் வரை நடந்தே பாடிக்கொண்டே செல்வேன். எங்கோ படித்தேன். மாலி கடற்கரைக்குச் சென்று அலையின் ஸ்ருதிக்கு இணையாக புல்லாங்குழல் வாசிப்பாராம். அது அவருடைய சாதகம.

பிர்க்காக்கள் அனாயாசமாக உதிரும் கமகங்களின் வீச்சு ஆச்சர்யமாக இருக்கும். ஈதெல்லாம் எனக்குள் ஒளிந்து கொண்டிருந்தனவா? இந்திரன் விழிகள் என்னில் விழித்துக்