பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

செளந்தர கோகிலம்



களுடைய சின்னக் குழந்தையோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று புன்னகையோடு கூறினாள். உடனே பூஞ்சோலையம்மாள் அவ்விடத்தை விட்டு அடுத்த கட்டிடமான போஜன மண்டபத்திற்குப் போய்விட்டாள்.

முன் மஹாலில் விடப்பட்ட கண்ணபிரான் தனக்குப் பக்கத்தில் இருந்த சம்பந்தமூர்த்தி என்பவரோடு சம்பாஷித்த வண்ணம் அந்த மஹாலின் கண்கொள்ளா வனப்பையும் அலங்காரத்தையும் பார்த்து ஆநந்தித்துக் கொண்டிருந்தான். சம்பந்த மூர்த்தி என்பவர் பூஞ்சோலையம்மாளது தங்கையின் புத்திரர். அவரது தந்தை ஒரு பிரபலமான வர்த்தகர், கண்ண பிரானை உபசரிப்பதற்கு ஆண் பிள்ளைகள் ஒருவருமில்லை என்பதைக் கருதி கோகிலாம்பாள் அனைவரையும் அன்றைய விருந்திற்கு வரவழைத்திருந்தாள். முதல் நாள் நேரிட்ட அபாயத்தில், அவனே கோகிலாம்பாளையும், செளந்தரவல்லி யையும் காப்பாற்றியவன் என்பதையும், அதன் பொருட்டே அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் அறிந்தவராதலாலும், கண்ணபிரானை மிகுந்த அன் போடும், மரியாதையோடும் உபசரிக்க வேண்டுமென்று பூஞ்சோலையம்மாள் அவரிடத்தில் சொல்லி இருந்தமையாலும், அவர் கண்ணபிரானை நிரம்பவும் விசுவாசமாகவும், பிரியமா கவும், மரியாதையாகவும் உபசரித்து வரவேற்று உட்கார வைத்ததுமன்றி, அவனுக்கு காப்பி, சோடா, இளநீர் முதலிய ஏதாவது வஸ்து தாகத்திற்கு தேவையாவ்ென்று விசாரிக்க, அவன், தனக்கு உடம்பு அசெளக்கியமாக இருப்பதால், தனக்கு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டான். அவனது மனம் முழுவதும் அடுத்த விடுதியிலிருந்த கோகிலாம்பாளின் மீதே சென்றிருந்தது. பக்கத்து விடுதியில் யாரோ ஸ்திரீகள் பேசுகி றார்கள் என்பதை மாத்திரம் அவன் உணர்ந்தானேயன்றி, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும், இன்னின்னார் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள மாட்டாமல் தவித்துக் கொண்டிருந்தான் யெளவனப் பருவத்தினரான அணங்குகள் இருவரும், ஆண்மக்களிற்கு எதிரில் வரமாட்டார்கள் என்பதை அவன் உணர்ந்தவனாதலால், அன்றைய தினம் தான் கோகி