பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 89

குறைவென்றும் எல்லோரும் ஒப்புக்கொண்டு, பிற்பகல் வரையில் சந்தோஷமாக இருந்துவிட்டு, ஒவ்வொருவராகப் பூஞ்சோலையம்மாளிடத்தில் விடைபெற்றுக் கொண்டு, அரை மனதோடு அந்தப் பங்களாவை விட்டுத் தத்தம் அலுவலையும், ஜாகையையும் நோக்கிச் செல்லலாயினர். அவ்வாறு அன்றைய மாலை ஐந்து மணிக்குள், அந்தப் பங்களாவில் வந்திருந்த விருந்தினர் எல்லோரும் போய்விட்டனர். அன்றைய காலையில் கஜகஜவென்று ஜன நிறைவுள்ளதாகக் காணப்பட்ட அந்த உன்னத மாளிகை மாலைக்குள் முற்றிலும் காலியாகிவிட்டது. அதன் சொந்தக்காரரான பூஞ்சோலையம்மாளும், அவளது புதல்வியர் இருவரும், பணி மக்களும், கற்பகவல்லியம்மாளும், கண்ணபிரானுமே மிஞ்சி இருந்தனர். விருந்திற்கு வந்த மற்ற எல்லோரும் போய்விட்டதையும், தாங்கள் மாத்திரம் மிகுதியாயிருந்ததையும் உணர்ந்த கற்பகவல்லியம்மாள் தனக் கெதிரில் உட்கார்ந்திருந்த பூஞ்சோலையம்மாளை நோக்கி, ‘சரி நேரமாகிறது; எங்களுக்கும் உத்தரவு கொடுக்க வேண்டும். சர்வ சாதாரணமான எங்களைத் தாங்கள் பொருட்படுத்தி, வருந்தி உபசரித்து அழைத்து வந்து விருந்துண்பித்து அன்பாகிய மழையைப் பெய்து, எங்களைக் கெளரவப் படுத்தி ஆநந்தக் கடலில் ஆழ்த்தியதைப் பற்றி, எங்களுடைய மனசில் உண் டாகும் நன்றி விசுவாசத்தை நாங்கள் எப்படி தெரிவித்துக் கொள்ளப் போகிறோம் என்பது தெரியவில்லை. நாங்கள் தங்க ளுடைய பங்களாவிற்குப் பக்கத்திலுள்ள அதே ஜாகையில் இருப் பவர்கள். தங்களுடைய அபிமானமும் ஞாபகமும் எப்போதும் மாறாமல் எங்கள்மேல் இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப் பத்திலும், தாங்கள், காலாலிடும் வேலையைத் தலையால் செய்ய நாங்கள் காத்திருப்போம். நாங்கள் உத்தரவு பெற்றுக் கொள்ளு கிறோம்' என்று பணிவாகவும், நயமாகவும் கூறி வேண்டிக் கொண்டாள்.

அதைக் கோட்ட பூஞ்சோலையம்மாள் அன்பாகப் புன்னகை செய்து, 'தங்களுக்குக் கூடவா அவசரம்? மற்றவர்கள் தான் துாரமான இடங்களில் இருப்பவர்கள்; அவர்கள் போனது நியாயந்தான். தாங்கள் இதோ பக்கத்தில் இருப்பவர்கள். அங்கே இருந்தாலென்ன? இங்கே இருந்தாலென்ன? தங்களுடைய ஸ்ரஸ்