பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 97.

வளைகளும் காணப்பட்டு, அவற்றின் மீது சம்பங்கி, ஜாதி மல்லிகை, மனோரஞ்சிதம் அவைகளில் நிறைந்திருந்த மலர்கள், பரிமள கந்தத்தையும், ஆநந்த சுகத்தையும் அள்ளி அள்ளி வீசின. எங்கு பார்த்தாலும் ரோஜா, மல்லிகை, முல்லை, செண்பகம், பாரிஜாதம், பொன்னலரி முதலிய புஷ்ப ஜாதிகளே நிறைந்து, மலர்ந்து நகைத்து மனிதரை வாருங்கள் வாருங்கள் என்று உபசரித்து வரவேற்பதுபோல விளங்கின. இடையிடையில் தாமரை, அல்லி, நீலோத்பலம் முதலிய மலர்கள் நிறைந்த சிறு சிறு தடாகங்களும், மணல் மேடுகளும், சலவைக்கல் மேடை களும் அபிரிமிதமாகக் காணப்பட்டன. மரங்கள் தோறும் ஊஞ்சற் பலகைகளும், மின்சார விசிறிகளும், சாய்மான நாற் காலிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தென்னை மரங்களும், கமுகு மரங்களும் வண்டி வண்டியாகத் தொங்கிய குலைகளைத் தாங்க மாட்டாமல் வளைந்து வளைந்து நிமிர்ந்தன. பலா மரங்களில் வேரிலிருந்து உச்சி வரையில் பெருத்த பெருத்த கனிகள் உருண்டும் தொங்கியும், வெடித்துத் தேனை ஒட விட்டுக் கொண்டிருந்தன. மாமரங்களிலும், அவற்றின் அடியிலும் கும்பல் கும்பலாக பழங்கள் உதிர்ந்து கிடந்தன. எங்கு பார்த்தாலும் கனிகளின் நறுமணமும், பூக்களின் பரிமள கந்தமும் குளிர்ச்சியும் ஒன்று கூடி தென்றற்காற்றினால் அந்தச் சோலை முற்றிலும் பரப்பப்பட்டு பிரம்மாநந்த மயமாக நிறைந்திருந்தன. எங்குப் பார்த்தாலும் மான்களும், முயல்களும், மயில்களும், குரங்கு களும் சுயேச்சையாகத் திரிந்து, பழங்களைத் தின்று, பளிங்கு போல இருந்த தண்ணிரைப் பருகித் துள்ளிக்குதித்து வேடிக்கை யாக விளையாடி இருந்தன. மரக்கிளைகளில் எல்லாம் குயி லினங்கள் நிறைந்து, கந்தருவ கீதம் பாடுவதுபோலத் தமது தீங்குரலை எழுப்பி தேவாமிருதத் துளிகளை ஜி.வீர் ஜிலீரென்று வீசிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சுகங்கள் நிறைந்த மனமோகன இன்பக் களஞ்சியமான அந்தச் சோலையில் நிறைந்திருந்த இன்பங்களால் கவரப்பட்டு, ஆனந்த பரவசம டைந்து அதற்குள் நுழைந்து ஒரிடம் விடாமல் பார்த்துக் கொண்டே நடந்தான். தேவேந்திரனது சிங்கார வனம்போலக் காணப்பட்ட அந்தப் பூஞ்சோலையின் சொந்தக்காரி கோகிலாம் பாள் என்ற நினைவும், அவளை மணந்து அந்தச் சோலையின்

செ.கோ.1-8