பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

செளந்தர கோகிலம்



சுகங்களையெல்லாம் எப்போதும் நிரந்தரமாக அனுபவிக்கக் கொடுத்து வைத்த பாக்கியவான் எவனோ என்ற எண்ணமும் கண்ணபிரானது மனதில் தோன்றித் தோன்றி அவனை வருத்த லாயின. அப்படிப்பட்ட லட்சாதிபதியின் புதல்வியை நினைத்து நினைத்துத் தன் மனது வீணாகப் புண்படுகிறதே என்றும், தான் அந்த மடந்தையைக் மணக்க நினைப்பது முடவன் கொம்புத் தேனை எடுக்க விரும்புவது போன்றது என்றும், எண்ணி எண்ணி, அந்த யெளவனப் புருஷன் சித்தப்பிரமை கொண்ட வன்போல எவ்வித நோக்கமும் இன்றித் தனது கால் சென்ற இடத்திற்கு எல்லாம் போய்க் கொண்டிருந்தான். பரம ஏழையான தான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் தனக்கு அந்த செல்வமதி கிடைக்கமாட்டாள் என்பது அவனது மனதில் நிச்சயமாகத் தெரிந்தது. ஆனாலும், அவளைப் பற்றிய நினைவும், அவளது அழகிய வடிவமும், அவனது மனதை விட்டு நீங்காமலே இருந்து, அவனது மனதைப் புண்படுத்தி, ஒருவிதமான இன்டத்தையும், சஞ்சலத்தையும் ஊற்றெடுக்கச் செய்து கொண் டிருந்தன. கோகிலாம்பாளது நிகரற்ற அழகையும், குணத்தையும் கண்டு உணர்வு கலங்கி, அறிவு பிறழ்ந்து, ஊணுறக்கமின்றிக் களைத்துத் தளர்வடைந்து தள்ளாடிய நிலைமையில் அவன் அந்த உத்யான வனத்திற்குள் நுழைந்தான். ஆதலால் அந்த இடத்தின் அற்புத அழகும், குளிர்ச்சியும், குயிலின் இன்னோசையும், மலர்களின் மணமும், கனிகளின் கமழ்வும், தென்றலின் சுகமும் ஒன்று கூடி, அவனது வேதனையை ஆயிரங் கோடியாகப் பெருக்கி அவனை உலப்பின. எங்கேயாகிலும் சற்று நேரம் உட்காரலாம் என்ற நினைவினால் தூண்டப்பட்டவனாய், அவன் மரங்களின் கீழ் தொங்கிய சாய்மான நாற்காலியில் உட்கார்ந்தால், தள்ளாடிய அவனது தேகத்திற்கு அது பரமாநந்த சுகமாகத் தோன்றினாலும், அவனது மனம் அவனை அங்கே இருக்க விடாமல் உறுத்தி அடுத்த நொடியில் கிளப்பி விடும். அவன் நடந்த இடங்களில் கைக்குப் பக்கத்தில் பிரம்மாண்டமாக மலர்ந்து வருந்தியழைத்த எண்ணிறந்த ரோஜாப் புஷ்பங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவைகளுள் ஒன்றைக்கொய்து மோந்து பார்க்க வேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டு அவனது வலக்கரம் நீண்டது. ஆனாலும், அடுத்த நிமிஷம், "சே இந்தப்