பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 105

கூடாதென்று ஒப்புக் கொண்டதுதானே! எல்லாச் சங்கதியும் உங்களுக்குத் தெரிந்திருந்தும் நீங்கள் இப்படி கோபித்துக் கொள்ளுகிறீர்களே! போனது போகட்டும். என்னுடைய உடம் பின் ஸ்திதியைப் பற்றிய பிரஸ்தாபத்தையே நீங்கள் அவர்க ளிடத்தில் எடுக்க வேண்டாம். நான் இந்த இராத்திரி போஜனத் தையாவது கொஞ்சம் சாப்பிட முயற்சி செய்து பார்க்கிறேன். அவர்கள் யாரும் என் விஷயத்தில் சந்தேகம் கொள்ளாமல் நடந்து கொள்வது என்னைச் சேர்ந்த பொறுப்பு: நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறினான்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள், "சரி, எப்படியாவது கொஞ்சம் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி, இன்றைய இரவுப் பொழுதைக் கடத்து. பொழுது விடிவதற்குள் சரியாகி விடாதா, பார்க்கலாம்” என்று கூறி, அவனை அங்கேயே இருக்கச் செய்துவிட்டு உட்புறம் போய்விட்டாள்.

அதன்பிறகு அன்றைய தினம் இராத்திரிப் போஜனம் நடை பெற்றது. பகலில் வந்து கூடியிருந்த ஆண் விருந்தினர் எல்லோரும் போய்விடவே, கண்ணபிரான் தனியாகவே உட்கார்ந்து விருந்துண்ண நேர்ந்தது. தனது புதல்வன் அன்னியர் பரிமாறினால் லஜ்ஜைப்படுவானோ என்ற காரணத்தைக் கூறி கற்பகவல்லியம்மாளே அவனுக்கு இலைபோட்டுப் பரிமாறத் தொடங்கினாள் பூஞ்சோலையம்மாளும் இடையிடையே நெய், பrண பலகாரங்கள், பாயஸம் முதலியவற்றை எடுத்து வந்து, வெட்கப்படாமல் நன்றாகச் சாப்பிடும்படி உபசார வார்த்தைகள் கூறி தாராளமாகப் பரிமாறத் தொடங்கினாள். தேவாமிருதத்தின் இனிமையைத் தோற்கச் செய்யும் அதிமாதுரியமான பதார்த்தங்கள் எல்லாம், கண்ணபிரானுக்கு வேப்பங்காய் போலக் கசந்து குமட்டல் உண்டாக்கின. ஆனாலும், தனது தாயும், பூஞ்சோலையம்மாளும், தனது நிலைமையைக் கண்டு கொள்ளாதிருக்க வேண்டும் என்ற நினைவினால், அவன் நிரம்பவும் பாடுபட்டு, சிற்சில வஸ்துக்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே செலுத்தி, ஏதோ ஆகாரம் செய்துவிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு எழுந்து கைகால்களை அலம்பிச் சுத்தி செய்து கொண்டபின், அவனுக்காக குறிப்பிட்ட ஒரு கட்டிலில்