பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 107

அதைக்கண்ட பூஞ்சோலையம்மாள் தனது இளைய குமாரியின் மீது ஒருவாறு அதிருப்தியடைந்து, "என்ன செளந்தரா! உனக்கு இவ்வளவு வயசாகியும், கொஞ்சங்கூட புத்தி இல்லையே! சாப்பிட்டுக் கையலம்பவில்லை. இடுப்பொடிந்த கிழவி மாதிரி கட்டிலில் படுத்துக் கொள்ளுகிறாயே! நாள் முழுதும்தான் அந்தக் கட்டிலிலேயே இருக்கிறாயே. பெரியவர் களுக்கு எதிரிலாவது கொஞ்ச நேரம் மரியாதையாக இருக்கக் கூடாதா? உனக்குத் தெரியாவிட்டால் அக்காளைப் பார்த்தாவது நீ கற்றுக் கொள்ளக்கூடாதா? அக்காள் எங்கே இருக்கிறாள் என்பதைப் பார்த்தாயா?” என்று அன்பாகக் கடிந்து கூறினாள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி குதூகலமாக நகைத்து, "அது நம்முடைய சமையற்காரியினுடைய குற்றம்; அவள் அந்த சேமியா பாயஸ்த்தை அவ்வளவு இனிப்பாக ஏன் செய்தாள்? அது கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டது, வயிற்றின் பாரம் தூக்க முடியவில்லை. மயக்கம் கீழே தள்ளுகிறது, படுத்துக் கொண்டால் அன்றி உடம்பு சொன்னபடி கேட்காது போல் இருக்கிறது. யார் கோபித்துக் கொண்டாலும், நான் இந்த உடம் பைக் கொஞ்ச நேரமாவது கீழே போடத்தான் போகிறேன்” என்ற வேடிக்கையாக மறுமொழி கூறிய வண்ணம் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அதைக்கண்ட பூஞ்சோலையம்மாளது முகம் அதிருப்தி யாலும், கோபத்தினாலும் மாறுபட்டது. அவள் அதற்கு மேலும் ஏதோ கடுமையான வார்த்தைகளைச் சொல்ல இருந்த சமயத்தில் கற்பகவல்லியம்மாள் குறுக்கிட்டு, மிகுந்த வாஞ்சையோடு செளந்தரவல்லிக்குப் பரிந்து பேசத் தொடங்கி, 'கோபித்துக் கொள்ள வேண்டாம்; அறியாத குழந்தைகளை இந்த விஷயங்க ளில் எல்லாம் நாம் கட்டுப்படுத்த முடியாது, நான்தான் உங்கள் வீட்டு மனுஷியாகி விட்டேன்; என்னிடத்தில் அந்தக் குழந்தை பயந்து நடுங்கி அந்நிய மனுவிபோல மரியாதை செய்ய வேண் டுமா? பாவம், படுத்துக் கொள்ளட்டும்' என்று நயமாகவும் அன்பாகவும் கூறினாள்.

உடனே கோகிலாம்பாளும், தனது தாய் கோபத்தை அதிகமாகக் காட்டி கற்பகவல்லியம்மாளுக்கு முன் விகாரமாக