பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

செளந்தர கோகிலம்



நடந்து கொள்ளாமல் தடுத்து விட நினைத்து தணிவான குரலில் மிருதுவாகப் பேசத் தொங்கி, “நான் அப்போதே அந்த வேலைக் காரியிடத்தில் சொன்னேன். அவள் அதைக் கவனிக்காமல் ஒரு முழு ஜாதிக்காயை நெய்யில் பொரித்து, அந்தப் பாயஸ்த்தில் போட்டு விட்டாள். அதனால் எனக்குக் கூட, கொஞ்சம் மதமது வென்று போதையாக இருக்கிறது. செளந்தராவுக்கு அது கொஞ் சமும் ஸ்கிக்கக் கூடவில்லை போலிருக்கிறது. அதனாலேதான் படுத்துக் கொண்டு விட்டாள் போலிருக்கிறது” என்று நயமாகக் கூற, அந்தக் குறிப்பை அறிந்த பூஞ்சோலையம்மாள் உடனே தனது அருவருப்பை விலக்கி சந்தோஷமும், புன்னகையும் காட்டிய வதனத்தினளாய்க் கற்பகவல்லியம்மாளை நோக்கி, “சரி, சின்னவர்களுடைய கட்சி பலத்துப் போய் விட்டது. இனிமேல் நம்முடைய கை ஓங்காது. இருந்தாலும் அந்த வேலைக்காரி செய்தது சுத்தத் தப்பான காரியம். ஜாதிக்காய் மகா கெட்டது. நம்முடைய உடம்பு அதைத் தாங்குமா? போடாதே என்று குழந்தை சொல்லியிருக்கும்போதே அவள் ஒரு முழுக் காயை உடைத்துப் போட்டு, எல்லோருடைய உடம்பையும் கெடுத்து விட்டாளே. எனக்குக் கூட உடம்பு ஒரு மாதிரி யாகத்தான் இருக்கிறது. அது உள்ளே புகுந்து கொண்டு ஏதோ தொந்தரவு செய்கிறது. நம்முடைய செளந்தரவல்லி இருக்கி றாளே, அவளுடையது நிரம்பவும் மெலுக்கான உடம்பு ஸ்நானம் செய்கிற வெந்நீரில், சூடு கொஞ்சம் அதிகமாக இருந் தால், அவள் போடுகிற கூச்சலில் ஊரே கிடுகிடுத்துப் போகும். அவளுக்கு இவ்வளவு வயசாகியும், அவள் எந்த விஷயத்திலும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாள். இவளுடைய விஷயந் தான் எனக்கு நிரம்பவும் கவலையாக இருக்கிறது. இப்படிக் குழந்தை மாதிரியே அவள் இருந்தால் நாம்தான் ஏதோ பொறுத்துக் கொண்டிருக்கிறோம். புருஷன் வீட்டுக்குப் போனால், அவர்கள் பொறுப்பார்களா? நம்முடைய வயிற்றில் பிறந்த குழந்தை யாயிற்றே என்று நாம் என்னவோ தள்ளிக் கொண்டு போகி றோம். அவள் எப்படிப்பட்ட சீமான் வீட்டுக்குப் போனாலும், அவர்களுக்குப் படிந்து, அவர்களுடைய செளகரியப்படி நடக்க வேண்டுமேயன்றி, அவளுடைய செளகரியப்படி அவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா?" என்றாள்.