பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 111

தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அது பிடிக்காமற் போனால், அதிகப் பணக்காரராக இல்லாமல் சாதாரணமான நிலைமையில் இருப்பவராகப் பார்த்துத்தான் கட்ட வேண்டும்.

கற்பகவல்லியம்மாள்:- நிரம்பவும் பெருத்த பணக்காரராக இல்லாவிட்டாலும், சுமாரானவர்களாகப் பார்த்துக் கட்டினால், அவர்கள் சந்தோஷமாக இங்கே வந்து இருப்பார்கள். அப்படியே செய்து விட்டாலென்ன? -

பூஞ்சோலையம்மாள்:- அப்படிச் செய்வதுதான் உத்தமம். நமக்கு மனிதர் தேவையேயொழிய பணம் தேவையில்லை. நல்ல குணமும், நல்ல நடத்தையும், ஸ்ரஸமான சுபாவமுள்ள மனிதராக இருந்தால், அதுவே போதுமானது. என்னுடைய மூத்த குழந்தை அப்படித்தான் செய்துகொள்ள வேண்டுமென்று சொல்லிக்கொண்டு வந்தது. அதற்குச் சரியான மனுஷ்யாளும் ஏற்பட்டு விட்டார்கள். சின்னக் குழந்தையின் மனப்போக்கு அப்படிப்பட்டதல்ல. தனக்கு வருகிற மாப்பிள்ளை லக்ஷாதி பதியின் பிள்ளையாக இருக்க வேண்டுமாம். தான் ஏழையின் சம்சாரமென்று யாராவது சொன்னால், நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்போல ஆகி விடுமாம். அவன் அதிக அழகு உடையவனாக இருப்பதோடு, எப்போதும் சொகுசாகவும், டாம் பீகமாகவும் அலங்கரித்துக்கொண்டு, மோட்டார் வண்டியில் அவளையும் வைத்துக் கொண்டு, எந்தவிடத்தில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எப்போது பார்த்தாலும் அலைந்து கொண்டே இருக்கக் கூடியவனாக இருக்க வேண்டுமாம். மாப்பிள்ளை ஏழையாக இருந்தால் அவனுக்குப் பெரும் புத்தி இருக்காதாம். அவன் சிக்கனமும் செட்டுமாக இருந்து பிசினாரித் தனம் செய்வானாம். ஆகையால் அவளுக்கு மிக உயர்வான இடத்துப் பிள்ளையைத்தான் கட்டிக்கொள்ள பிரியமாம். அவள் இப்படியெல்லாம் பைத்தியம்போல வாயில் வந்தபடி பிதற்று கிறாள். நாங்கள் எவ்வளவோ புத்திமதி சொல்லி அவளுடைய மன்சை மாற்ற முயல்கிறோம்; அவள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிறாள். நாங்கள் ஏதாவது நியாயம் சொல்லப் போனால், அவள் குப்புறப்படுத்து அழத் தொடங்கி விடுகிறாள். மூன்று நாளானாலும் தண்ணிர் குடிக்கக் கூட எழுந்து வருகிற