பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 113

உடனே கற்பகவல்லியம்மாள் மிகந்த சந்தோஷமும், மகிழ்ச் சியும் அடைந்து, "அப்படியானால், எங்களுக்கெல்லாம் அதிசீக்கி ரத்தில் கலியாணச் சாப்பாடு கிடைக்கும் போலிருக்கிறது” என்றாள். -

பூஞ்சோலையம்மாள் புன்னகை செய்து, 'இந்தக் கலியாணமே உங்களுடையது. சாப்பாடெல்லாம் உங்களு டையது. இனி நாங்கள் எல்லோரும் உங்களுடைய மனிதர்கள். நீங்கள் பார்த்து எங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டால், நாங்கள் சாப்பிட வேண்டியது. இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டியது” என்று மகிழ்ச்சியாகக் கூறினாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த வியப்பும் பூரிப்பும் அடைந்து, அடேயப்பா எங்களுக்கு எவ்வளவு பெரிய மரியாதை கொடுக்கிறீர்கள்! நாம் ஒரே ஒரு நாள்தான் பழகினோம். அதற்குள் சகலமான அதிகாரத்தையும் எங்களுக்கே கொடுத்து விட்டீர்களே!” என்று வேடிக்கையாகப் பேசினாள்.

பூஞ்சோலையம்மாள், 'தடையென்ன! இனி எல்லா அதிகாரமும் உங்களுடையதுதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம். மனிதர் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரே நிமிஷத்தில் தெரிந்து கொள்ளலாமே! அதற்கென்ன, வருஷக் கணக்கில் பழக வேண்டுமா?" என்றாள்.

கற்பகவல்லியம்மாள், தாங்கள் சொல்வது வாஸ்தவந்தான். ஒரு மனிதருடைய குணாதிசயங்களை சுலபத்தில் அறிந்து கொள் ளலாம் என்பது நிஜந்தான். ஆனால் யாரோ வழியில் போகிற வர்கள் நல்ல குணமுடைய மனிதராக இருக்கிறார்கள் என்று எல்லா அதிகாரத்தையும் அவர்களிடத்தில் ஒப்புவித்து விடுவது என்பது மாத்திரம் புதிய சங்கதியாக இருக்கிறது. அதை நான் கேள்வியுற்றதே இல்லை. என்னவோ உலகத்தில் மற்ற எவருக்கும் கிடைக்காத புதுமையான அதிகாரம் எங்களுக்குக் கிடைக்கிறது. தாங்களாகப் பார்த்துக் கொடுக்கும் பெருமையை நாங்கள் வகிக்க முடியாது என்று சொல்வது ஒழுங்கல்ல. அதிருக்கட்டும். கலியானத்துக்கு இடம் நிச்சயமாகியிருப்பதாகச் சொன்னீர்களே, நிச்சய தாம்பூலம் மாற்றியாகி விட்டதா? இனிமேல்தான் மாற்ற வேண்டுமா?" என்றாள்.

செ.கோ.1-9