பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 115

பூஞ்சோலையம்மாள்:- (மகிழ்ச்சியாக புன்னகை செய்து) என்ன நீங்கள் இப்படி பேசுகிறீர்களே! உங்களுடைய விட்டிலேயே மனிதரை வைத்துக் கொண்டு நீங்கள் ஊரெல்லாம் தேடி அலைந்தால் அவர்கள் அகப்படுவார்களா? ஆபீசுக்குப் போகும் வேளை தவிர, மற்ற எல்லா நேரத்திலும் நீங்கள் எங்க ளுடைய மாப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்களுக்கு நினைவுண்டாகவில்லையே!

கற்பகவல்லியம்மாள்:- (முற்றிலும் பிரமித்து) என்ன இது! எங்களுடைய வீட்டில், வேறே யாரும் குடித்தனம் கூட இல் லையே. அது நிரம்பவும் சின்ன வீடாயிற்றே? பொழுது விடிந் தால் பொழுது போனால், நான் என் மகனைத்தான் பார்க்கி றேன்; வேறே யாரையும் பார்க்கிறதில்லையே! நீங்கள் ஏதோ என்னிடத்தில் பரிஹாஸ்மாகப் பேசுகிறீர்கள் போல இருக்கிறது! -என்று மிகுந்த வியப்போடு மொழிந்தாள்.

பூஞ்சோலையம்மாள் குதுரகலமாக நகைத்து, 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தினம் தினம் நீங்கள் யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அவரும் எங்களுடைய மாப் பிளையும் ஒரே மனிதர்போல இருக்கிறதே! அப்படியானால் நான் எங்களுடைய சம்பந்தியம்மாளோடுதான் பேசிக்கொண்டிருக் கிறேன். கொஞ்ச நேரத்துக்குமுன், நான் சொன்ன வார்த்தையில் தப்பு என்ன இருக்கிறது? இந்தக் கல்யாணமே உங்களுடையது. சாப்பாடெல்லாம் உங்களுடையது என்று நான் சொன்னபோது, நீங்கள் அதைப்பற்றி ஆட்சேபணை செய்தீர்களே இப்போதும் நீங்கள் ஏதாவது ஆட்சேபனை சொல்வீர்களா?' என்றாள்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த பிரமிப்பும், வியப்பும் அடைந்து, தனது செவிகளையே நம்பாமல், தான் அதற்கு என்ன மறுமொழி சொல்வது என்பதை உணராமல் சிறிது நேரம் கிலேசமுற்றவளாக இருந்து, "சரி, சரி. தாங்கள் பரிஹாசமாகப் பேசுகிறீர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது. இதுவரையில் தாங்கள் நிஜமாகப் பேசுகிறீர்களென்றே நினைத்து நான் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன், மெய்யாகவே மூத்த குழந்தைக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டதா, அல்லது