பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

செளந்தர கோகிலம்



வேடிக்கையாகப் பேசுகிறீர்களா?" என்று அன்பாக வற்புறுத்தி

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் முன்னிலும் அதிகமாகப் புன்னகை செய்து, 'அடடா! நான் சொன்னதையெல்லாம் நீங்கள் பரிஹாஸ்மாகவா நினைத்துக் கொண்டீர்கள்! நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜமே தவிர வேடிக்கை யில்லை. இன்று காலையில் நான் உங்களுடைய ஜாகைக்கு வந்து உங்களைப் பார்த்த முதல், உங்களுடைய நற்குணமும், நல்ல நடத்தையும் என்னுடைய மனசுக்கு நிரம்பவும் பிடித்தமாக இருந்தன. கோகிலாம்பாளின் கலியான விஷயமாக நாங்கள் ஏற்கனவே எண்ணி இருந்த கருத்துக்கு ஒத்த மனிதர்கள் நீங்கள்தான் என்ற ஒரு நினைவும் என் மனசில் தோன்றிக் கொண்டே இருந்தது. இன்றைய தினம் பகல் முழுவதும், நாங்கள் ரகசியப் போலீசார் வேலை செய்து, உங்களுடைய நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம்; இந்த விஷயத்தில் என்னுடைய மனசும் குழந்தை கோகிலாம் பாளுடைய மனசும் ஒத்துப் போய்விட்டன. இனி உங்களுடைய மனசும் உங்கள் குமாரருடைய மனசும் ஒத்துப் போக வேண்டி யது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. ஆனால் எந்த விஷயத்திலும் உங்களுடைய குமாரர். உங்களுடைய சொல்லை மீறக்கூடியவர் அல்ல என்பது தெரிகிறது; ஆகையால் இந்தக் கலியாணம் நிச்சயமாவது இப்போது உங்கள் ஒருவருடைய சம்மதியைப் பொருத்ததாக இருக்கிறது” என்று நயமாகக் கூறினாள்.

எதிர்பாராத அந்த மகா சந்தோஷகரமான சங்கதி கற்பக வல்லியம்மாள் சகிக்கக் கூடிய வரம்பை மீறிய அபாரமான வியப்பையும் பிரம்மாநந்தத்தையும் உண்டாக்கி விட்டது. அவளது மனதில் கொந்தளித்து எழுந்த பெருங்களிப்பைத் தாங்கமாட்டாமல், கற்பகவல்லியம்மாள் விம்மிதமடைந்து ஆநந்தபாஷ்பம் சொரிந்து பூரித்துப் புளங்காகிதம் அடைந்து, பேசமாட்டாமல், ஸ்தம்பித்து மெய்ம்மறந்து இரண்டொரு நிமிஷ நேரம் சித்திரப் பதுமைபோல் இருந்தபின் பூஞ்சோலை யம்மாளை நோக்கி, "அம்மணி தாங்கள் சொல்வதற்கு இன்ன மறுமொழிதான் சொல்வது என்பது எனக்குத் தெரியவில்லை.