பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

செளந்தர கோகிலம்



தயாரித்து வையுங்கள், நாங்கள் சாப்பிடத் தயாராக இருக் கிறோம்" என்று அன்பாகவும் நயமாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் திகைத்து என்ன மறுமொழி சொல்வது என்பதை உணராமல் சிறிது நேரம் மெளனப் பேராநந்தத்தில் ஆழ்ந்திருந்தபின், 'அம்மா இது கிருஷ்ணபகவான் குசேலருக்குத் திடீரென்று அபார சம்பத்தை அளித்ததுபோல இருக்கிறதேயன்றி வேறல்ல. இன்றைய தினம் காலையில் தாங்கள் மகாலக்ஷ்மிபோல் எங்கள் வீட்டிற்குள் அடிவைத்தபோதே என் மனசில் ஒருவித ஆநந்தக் களிப்பும் மன வெழுச்சியும் உண்டாகி என்னைப் பரவசப்படுத்தின. இப்படிப் பட்ட புண்ணிய ஆத்மாக்களுடைய தரிசனம் கிடைப்பதால், இனி என்னுடைய கலி நீங்கிவிட்டதாக, என் மனசில் ஒர் எண்ணம் தானாகவே உதித்தது. இதற்கிணங்க, தாங்கள் அப்போதே ஏராளமான பொருள்களைக் கொணர்ந்து சம்மானம் செய்தீர்கள்; அதன் பிறகு வற்புறுத்தி இங்கே அழைத்து வந்து, அன்பையும், உபசாரத்தையும் மரியாதைகளையும் மழைபோலச் சொரிந்தீர்கள்; அவைகளைக் கண்டே நானும் என்னுடைய மகனும் மகிழ்ந்து பூரித்துப் போய், நாங்கள் பூர்வஜென்மத்தில் ஏதோ சொற்பம் நல்ல பூஜை செய்திருப்பதாக எண்ணிக்கொண் டிருந்தோம். இப்போது கடைசியாகத் தாங்கள் பிரஸ்தாபித்த விஷயம் என்னை அப்படியே பிரமிக்கச் செய்துவிட்டது. தாங் கள் இதுவரையில் சொன்னது எல்லாம் உண்மையான பேச்சு கள்தானா என்று என் மனம் இன்னமும் அவநம்பிக்கைப் படும் படியாக இருக்கிறது. இந்த விஷயத்தை தாங்களே முடிவு கட்டினர்களா? தங்களுடைய மூத்த குழந்தைக்கு இந்தச் சம்பந்தத்தில் பரிபூரணமான விருப்பமுண்டா? தாங்கள் என்னோடு பேசிப் பழகினர்களேயன்றி என்னுடைய மகன் எப்படிப்பட்ட குணமுடையவன் என்பதைத் தாங்கள் ஆர அமரக் கண்டறிய வேண்டாமா? எல்லாவற்றிற்கும், தாங்கள் அவசரப்படாமல் தங்களுடைய குழந்தையோடு கலந்து நன்றாக யோசித்து எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், 'அம்மா! இது எங்களுக்கு நிரம்பவும் முக்கியமான பெரிய விஷயம். நாங்கள்