பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 119

இனி அடையப் போகும் சந்தோஷமும், சுகமும் எங்களுக்குக் கிடைக்கும் மாப்பிள்ளையைப் பொருத்ததாக இருக்கின்றன. ஆகையால், இந்த விஷயத்தில் நாங்கள் அவசரமாக எந்தத் தீர்மானத்தையும் செய்ய மாட்டோம். இதுவரையில் இந்தக் குழந்தைகளைக் கட்டிக்கொள்ள வேண்டி ஒரு சுமார் இருநூறு பேர்கள் வந்து கேட்டிருப்பார்கள். எவருக்கும் நாங்கள் முடிவான உத்தரம் சொல்லவே இல்லை. அத்தனை பேர்களில் ஒருவர் கூட திருப்திகரமாக இல்லை. உங்களையும் உங்களு டைய குமாரரையும் பார்த்துப் பழகியது முதல், எனக்கும் சரி, கோகிலாம்பாளுக்கும் சரி, இந்தச் சம்பந்தம்தான் எங்களுக்கு ஒத்த சம்பந்தமென்ற ஒர் உறுதி தானாக ஏற்பட்டு விட்டது. இதில் இன்னொரு முக்கியமான சங்கதியும் இருக்கிறது. நாங்கள் விரும்பும் சகலமான குணங்களும் உங்கள் இருவரிடத்திலும் நிறைந்திருக்கின்றன. அதோடு என்னுடைய குழந்தைகள் இரண்டையும் உயிரையும் காப்பாற்றி எங்களுடைய குடும்ப விளக்கு அணைந்து போகாமல் நிலைநிறுத்தியவரும், மகா நற் குணமும், பரோபகாரமும், தயாளமும் நிறைந்தவருமான உங்க ளுடைய குமாரரை விட அதிக யோக்யமானவர்கள் வேறே யார் இருக்கப் போகிறார்களா? என்னுடைய குழந்தையை அவருக்குக் கட்டிக் கொடுக்க, நாங்கள் கடமைப்பட்டவர்களாகி விட்ட தன்றி, அவரும் பாத்திரமுடையவராகி விட்டார். இரண்டு பெண்களின் உயிரைக் காப்பாற்றிய புருஷ சிங்கத்துக்கு ஒரு பெண்ணையாவது நாங்கள் கட்டிக் கொடுக்காவிட்டால், எங்களைக் காட்டிலும் நன்றி கெட்ட மனிதர்கள் வேறே இருப் பார்களா? ஆகையால், நாங்கள் இந்த விஷயத்தைத் தீர்க்கா லோசனை செய்யாமல் ஏதோ பதற்றமாக இப்போது பேசுகி றோம் என்றும், ஒருக்கால் நாளையதினம் இந்தத் தீர்மானத்தை மாற்றி விடுவோமோ என்றும் நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுடைய குடும்ப வரலாறையும் உங்கள் இருவருடைய குணாதிசயங்களைப் பற்றியும், உங்களுடைய வீட்டுக்குப் பக்கத்திலுள்ள எங்கள் பால்காரி சொல்லி இருக்கிறாள். அதோடு நேற்றையதினம் என்னுடைய மூத்த குழந்தையே அவரை நேரில் கண்டு, அவருடைய யோக்கியதை எவ்வளவு என்பதைக் கண்டு, நேற்று இராத்திரியே, அவள் கலியானப் பிரஸ்தாபத்தை