பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - வது அதிகாரம் மாயமான்

  • * வ்வாறு எதிர்பாராத வகையில் ஆகாலத்தில் 53 # 9ے/ ஆதாயா நிரம்பவும். பதைபதைபாக ఇ5 ణ5 ੋ o கண்ட கண்ணபிரான் அளவிறந்த வியப்பும் திகைப் ఫీక్లీడ్లి பும் அடைந்து திடுக்கிட்டெழுந்து உட்கார்ந்து,
  • 'என்ன அம்மா! விசேஷம்?' என்று மிகுந்த ஆவலோடு கேட்க, கற்பகவல்லியம்மாள், "அப்பாதம்பி உனக்கு நான் எப்பேர்ப்பட்ட சந்தோஷ சங்கதி கொண்டு வந்திருக் கிறேன் தெரியுமா! நான் சொன்னால் நீ நம்ப கூட மாட்டாய். ஏதோ ஒரு பெருத்த கருத்தோடுதான் ஈசுவரன் அந்த அபாயத்தை உண்டாக்கி நம்மையும் இவர்களையும் சேர்த்து வைத்திருக்க வேண்டுமென்று நான் முன்பே சொல்லவில்லையா? அது சரியாகப் போய்விட்டது. இவர்களுடைய மூத்த பெண்ணை உனக்குப் பிரியந்தானா என்று கேட்டு அறிந்து கொண்டு வரும்படி என்னை இப்போது இங்கே அனுப்பினார்கள். நீ என்ன சொல்லுகிறாய்? தானாக வரும் இப்பேர்ப்பட்ட குபேர சம்பத்தையும் பூரீ தேவியையும் நீ வேண்டாம் என்று சொல்லப் போகிறாயா?" என்றாள்.

அந்த எதிர்பாராத சந்தோஷச் செய்தியைக் கேட்ட கண்ணபிரான் தனது செவிகளையே நம்பாமல் பிரமித்து ஸ்தம்பித்துப் போய் தான் என்ன மறுமொழி சொல்வதென்பதை உணராமல் திருட்டு விழி விழித்துக் கொண்டு அப்படியே நின்றான். தனக்கு அவர்களது சம்பந்தம் அந்த ஜென்மத்தில் கிடைக்கப் போகிறதா என்ற கவலையும் ஏக்கமும் கொண்டு தனது மனத்தையும் உடம்பையும் சித்திரவதை செய்து புண் படுத்திக்கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ஜீவாமிருதத் துளிகளைப் பெய்வது போல இருந்தது. அது உண்மைதானா அல்லது கனவோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது. முதல்