பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 123

நாளைய சாயங்காலத்திலிருந்து அதே எண்ணம் குடிகொண் டிருப்பதால் தன் மனதே ஒருகால் தன்னை அப்படி ஏமாற்று கிறதோ என்று ஐயம் தோன்றியது. அவ்வாறு அவன் இரண் டொரு நிமிஷ நேரம் தவித்திருந்த பிறகு, ‘என்ன அம்மா! நீங்கள் பரிஹாஸ்மாகப் பேசுகிறீர்களா, அல்லது நிஜமாகப் பேசுகிறீர்களா என்பதே எனக்கு முதலில் சந்தேகமாக இருக்கிறது. இவர்களுடைய செல்வமென்ன! செல்வாக்கென்ன! மேம்பாடென்ன? நமக்கு என்ன இருக்கிறது? இருந்திருந்து இந்த உலகத்தில் எத்தனையோ லக்ஷாதிபதிகளையெல்லாம் விட்டு, இவர்கள் நமக்கா பெண் கொடுக்கப் போகிறார்கள்?’ என்று மிகுந்த வியப்போடு கூறினான்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள், 'இல்லை தம்பி நான் இந்த அகாலத்தில் வந்து உடம்பு அசெளக்கியமாகப் படுத்தி ருக்கும் உன்னை எழுப்பி பரிஹாசம் செய்வேனா? நான் சொல்வது உண்மையான விஷயம். இவர்கள் இப்போதுதான் சொன்னார்கள்; உன்னுடைய சம்மதியைக் கேட்டுக்கொண்டு வரும்படி என்னை அனுப்பினார்கள்' என்று அழுத்தமாகவும், உறுதியாகவும் கூறினாள்.

கண்ணபிரான், 'இல்லையம்மா, இவர்கள் உன்னிடத்தில் விளையாட்டாகப் பேசியிருக்கிறார்கள். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளாமல் ஏமாறிப் போய்விட்டீர்களே! நமக்காவது இவர்கள் பெண்ணைக் கொடுக்கிறதாவது! கலியாணத்துக்கு எத்தனையோ பிரபுக்களெல்லோரும் வருவார்களேஅவர்களுக்கு எதிரில் இவர்கள் பெண்ணை நமக்குக் கொடுத்தால், அதனால் இவர்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதை இவர்கள் எண்ணி இருக்க மாட்டார்களா? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக இவர்கள் இப்படிப் புரளி செய்திருக்கிறார்கள். வேறொன்றுமில்லை’ என்றான்.

கற்பகவல்லியம்மாள் நயமாக வற்புறுத்திப் பேசத் தொடங்கி, "நான் கூட அப்படித்தான் முதலில் சந்தேகப்பட் டேன். இன்றைய தினம் காலையிலிருந்து இவர்கள் என்னி டத்தில் நிரம்பவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து வருகிறார்களேயன்றி, வேடிக்கையான புரளி வார்த்தைகளையே