பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

செளந்தர கோகிலம்



இவர்கள் பேசவில்லை. ஆகையால், அப்படிப்பட்ட பெரிய சங்கதியில் இவர்கள் திடீரென்று என்னிடத்தில் விளையாட் டாகப் பேசினார்கள் என்று எண்ணவோ நியாயமில்லை. அதுவும் தவிர, இவர்கள் ஒரு முக்கியமான கருத்தோடு தங்களுடைய பெண்ணை ஏழைகளுக்குக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள். இவர்களுக்கு ஆண் துணையே இல்லையாம். பணக்காரர்களுடைய வீட்டில் பெண்களைக் கொடுத்தால் இந்தச் சொத்துக்களை எல்லாம் இரண்டு பங்காகக் பிரித்து இரண்டு பேருக்கும் கொடுத்து அனுப்பி விட நேரிடுமாம். ஆகையால் பெண்களை ஏழைகளுக்குக் கொடுத்து மாப்பிள்ளை வீட்டாரை இங்கேயே கொண்டு வந்து வைத்துக் கொள்ளப் போகிறார் களாம். ஆகையால் மாப்பிள்ளை வீட்டாருக்குப் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில்லையாம். மாப்பிள்ளையின் வீட்டார் நல்ல குலத்தராகவும், யோக்கியர்களாகவும், அன்னி யோன்னியமாகவும் இருக்க வேண்டுமாம். அந்தக் குணங்க ளெல்லாம் நம்மிடத்தில் இருக்கின்றனவாம். அதோடு நீ இந்த இரண்டு பெண்களின் உயிரையும் காப்பாற்றினாயாம். இந்த விஷயங்களையெல்லாம் கருதி, இவர்கள் ஒரு பெண்ணை உனக்குக் கட்டிக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். நான் சொல்வது விளையாட்டல்ல, நிஜமான விஷயம்” என்றாள்.

கண்ணபிரான் உடனே நம்பிக்கைகொண்டு கரைகடந்த களிப்பும் ஆநந்தமும் அடைந்து பூரித்துப் புளகாங்கிதம் எய்தி மெய்ம்மறந்தவனாக நின்று, "அப்படியா சங்கதி! இரண்டு பெண்களையுமா ஏழைகளுடைய வீட்டில் கட்டிக் கொடுக்கப் போகிறார்கள்? இன்னொரு பெண்ணை யார் வீட்டில் கொடுக்கப் போகிறார்களாம்?' என்று வியப்போடும் ஆவலோடும் கேட்டான்.

கற்பகவல்லியம்மாள், 'மூத்த பெண் நல்ல புத்திசாலி, ஆழ்ந்த விவேகமுடையவள். அவள் ஏழையைக் கட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறாள். சின்னப் பெண் தங்களுக்குச் சமமான அந்தஸ்துடைய மனிதரின் வீட்டிலேதான் வாழ்க்கைப் படுவேன் என்கிறாள். ஆகையால், மூத்தவளைத்தான் உனக்குக்