பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 127

விம்மிதமுற்றுக் கிடந்தான். மகாராஜனது செல்வமும், செல்வாக்கும் ரதி தேவியின் அழகும், ஆழ்ந்த ஞானமும், புத்தி நுட்பமும், சமர்த்தும், சகலமான நற்குணங்களும், நல்ல நடத்தையும் பரிபூர்ணமாகப் பெற்ற அந்தக் கன்னிகை தன் மீது தரை கடந்த பிரேமையும் மையலும் கொண்டு தானாகக் கனிந்து வந்து தன்னை அடைவது போன்ற நிகரற்ற பாக்கியமும், அரிய பேறும் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் எவருக்கேனும் இடைக்குமோ என்ற மமதையும் வியப்பும் பொங்கிப் பொங்கி அவனது உள்ளத்தில் எழுந்து கரைபுரண்டோடி, அந்த ஒர் இரவிற்குள் அவனைப் புதிய மனிதனாக்கி அவனுக்குப் புதிய மேனியையும், முகக் காந்தியையும் உண்டாக்கின. அதுகாறும் வயிற்று நோய் கொண்டவன்போலத் தளர்ந்து சுருண்டு சுருண்டு மூலையைத் தேடியவன், கட்டிலடங்காத உற்சாகமும், மனோதிடமும், ஊக்கமும், ஜ்வலிப்பும் பெற்றவனாய் மாறிவிட்டான். அன்றைய தினம் தான் பூஞ்சோலையிலிருந்து திரும்புங்காலில் மேன்மாடத்திலிருந்து தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தவள் கோகிலாம்பாளோ அல்லது அவளது தங்கையோ என்ற சந்தேகம் திராமலே இருந்து அவனது மனதை அப்போது சஞ்சலத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. மகா விவேகியும், தன்னடக்கமும் உள்ள உத்தம குண மடந்தை யுமான கோகிலாம்பாள் அப்படிபட்ட வழுவான காரியத்தைச் செய்யக்கூடியவளன்று எனவும், இளையவளே தன்னைக் கண்டு புன்னகை செய்திருக்க வேண்டும் எனவும் கண்ணபிரான் எண்ணினான். செளந்தரவல்லி கள்ளம், கடபம் முதலியவற்றை அறியாத வெள்ளை மனுவி என்றும், அவளோடு தான் பேசுவது எளிதில் பலிக்கும் என்றும், கோகிலாம்பாள் திடமான மனதை உடையவளாதலால், கலியாணம் முடிவதற்குள் தான் அவளோடு பேசுவது சாத்தியமில்லாத காரியம் என்றும் அந்த யெளனவ புருஷன் உறுதியாக நினைத்தான்; அவளிடத்தில் கடுமையல் கொண்டு கருகும் தானும், அதுபோலவே தன்னிடத்தில் கடுமோகங்கொண்டு ரகஸியத்தில் தவித்திருக்கும் அந்தப் பெண்மணியும் தனியான இடத்தில் சந்தித்து ஒருவரோடொ ருவர் மனம் விட்டுப் பேசி, தங்களது உண்மையான மன நிலைமையை உள்ளபடி வெளிப்படுத்தி ஆநந்தம் அநுபவிக்கும்