பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 129

சிந்தையையும் உணர்ந்த முதலே அவளது மனம் சஞ்சல மடைந்து, அவனையே நினைத்துத் தியானம் செய்யத் தொடங் கியது. அந்த விரக வேதனை அவளது உள்ளத்தில் நிமிஷத்திற்கு நிமிஷம் விஷம் போலப் பெருகி, கண்ணபிரான் எப்பாடு பட்டானோ அதேவிதமாக அந்த மெல்லியலாளும் வாடித் துவண்டு கருகும்படி செய்து கொண்டிருந்தது. ஆனால் அவள் நல்ல உத்தம ஜாதி ஸ்திரீயாதலால் அவள் தனது மனநிலையைப் பிறர் உணராவிதம் அடக்கிக் கொண்டு தனது செய்கைகளையும், வார்த்தைகளையும் கண்டு எவரும் சந்தேகியாதபடி எச்சரிப் பாகவும், அடக்கமாகவும் நடந்து கொண்டிருந்தாள், ஆகவே, விருந்து நடத்தப்பட்ட தினத்தின் இரவில், பக்கத்து மகாலில் கண்ணபிரான் எப்படி அந்த அணங்கை நினைத்து அகோரமான தவம் புரிந்தானோ, அது போலவே அந்த மடவன்னமும் அவனை நினைத்து நினைத்து உருகிப் பாகாய் ஒடிக் கொண்டிருந்தாள்.

பூமிக்குள்ளிருந்தபடி இரண்டு எலிகள் ஒன்றையொன்று அடைய எப்படி மண்ணை அறுத்து வழி செய்யுமோ, அதுபோல அவர்களது இரண்டு மனமும் அரும்பாடு பட்டு, அந்த தினத்திற்கும், கலியாணத்திற்கும் இடையிலுள்ள காலமாகிய பெருத்த இடையூறை விலக்கி ஒன்றாகக் கூடுவதற்குரிய மார்க்கங்களைத் தேடிக் கொண்டிருந்தன. கலியாணத்திற்குள் தான் எப்படியாகிலும் முயன்று அந்த மடமயிலைத் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் என்று கண்ணபிரான் உறுதி செய்து கொண்டான். கோகிலாம்பாளோ முகூர்த்த தினத்தை அதிக நாள் தாமதியாமல், அதற்கடுத்த முதல் முகூர்த்த தினத்திலேயே நிறைவேறச் செய்து, அவனை மணவாளனாகப் பெற்று தனது மோக விடாயைத் தணித்து இன்புற வேண்டும் என்ற முடிவைச் செய்து கொண்டிருந்தாள்.

இருவரும் மற்றவருக்குமுன் ஐந்து மணிக்கே எழுந்து தத்தம் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு எப்போது பொழுது விடியப் போகிறது என்று மிகுந்த ஆவலும் கவலையும் கொண்டவராய் இருந்தனர். காலை எட்டு மணிக்குப் புரோகிதர் சாமா சாஸ்திரிலுவாரு விலை உயர்ந்த சால்வை, பஞ்சாங்கக்

செ.கோ.i-10