பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

செளந்தர கோகிலம்



கட்டு, சிவப்புத் தொந்தி, பொக்கை வாய், செவிட்டுக் காது, விபூதிப்பட்டை, தங்க ருத்திராrம், விபூதி சம்புடம் முதலிய அலங்காரங்களோடு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட வேலைக்காரர்கள் எல்லாரும் 'சுவாமி தெண்டம்' என்று கூறிக் கைகுவித்து வணங்கி குனிந்து நமஸ்காரம் செய்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு போக, ஸ்திரீகள் இருக்கும் விடுதியில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த பூஞ் சோலையம்மாள் புரோகிதரை வணங்கி நமஸ்கரித்து, அவருக் காகப் போடப்பட்டிருந்த உன்னதமான ஒரு பீடத்தில் அவரை அமரச் செய்ய, அவளுக்குப் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த கற்பகவல்லியம்மாளும் ஐயருக்கு நமஸ்காரம் செய்தாள். கோகிலாம்பாள், செளந்தரவல்லி ஆகிய இருவரும் சிறிது தூரத்திற்கு அப்பால் மறைவாக உட்கார்ந்திருந்தபடியே அங்கே நிகழ்ந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தனர். புரோகிதர் தமக்குக் கும்பிடு போட்டவர்களையெல்லாம் நோக்கி மந்தகாலம் செய்து, இடது கையை மார்பு வரையில் உயர்த்தி ஆசீர்வதித்தவராய்ப் பூஞ்சோலையம்மாளை நோக்கி உட்கார்ந்து, கொள்ளும்படி சைகை காட்ட அந்த அம்மாள் பரவாயில்லை என்று மறுமொழி கூறி நிற்க, புரோகிதர், அவர்களது யோக rேமங்களைப் பற்றி விசாரிக்கலானார். உடனே பூஞ் சோலையம்மாள் தங்களது குடும்பத்தின் rேமசமாசாரங்களை எல்லாம் சுருக்கமாகத் தெரிவித்தபிறகு தனது மூத்த பெண்ணான கோகிலாம்பாளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருப்பதாகக் கூறி அதி சீச்சிரமான ஒரு முகூர்த்தத்தில் அதை நிறைவேற்றத் தாங்கள் இச்சைப்படுவதால் நிச்சயதார்த்தம், முகூர்த்தம் ஆகிய இரண்டிற்கும் நாள் பார்த்துச் சொால்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள்.

அந்த சந்தோஷ சங்கதியைக் கேட்ட புரோகிதர் மகிழ்ச்சியடைந்து தமது பொக்கை வாயை மலர்த்திப் புன்னகை செய்தவராய், பூஞ்சோலையம்மாளை நோக்கி, 'அப்படியா! நிரம்ப சந்தோஷம் கலியாணம் நடத்த குழந்தைக்கு இதுதான் சரியான காலம். நல்ல காரியம் செய்தீர்கள். மாப்பிள்ளையின் பெயரென்ன? அவர் எந்த ஊரில் இருப்பவர்? உத்தியோகம் பார்ப்பவரா? படிக்கிறவரா?” என்று கேள்விகளை அடுக்கிக்