பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

செளந்தர கோகிலம்



வரும்படி வேலைக்காரனை அனுப்பி வைத்தோம். அவன் இந்த இடத்தைத் தெரிந்து கொண்டு நேற்று சாயங்காலந்தான் திரும்பி வந்தான். இராத்திரி காலத்தில் இங்கே வந்து தங்களையெல்லாம் அசெளகரியப்படுத்தக் கூடாதென்று யோசித்து நான் இப்போது புறப்பட்டு வந்தேன்; எங்களால் தங்களுடைய குழந்தைகளுக்குப் பெருத்த இடரும் தேகத் துன்பமும் அசெளக்கியமும் நேர்ந்து விட்டன. இந்தக் குற்றத்தை என்னுடைய தமயனார் வேண்டு மென்று செய்யவில்லை. அதைத் தாங்கள் உறுதியாக நம்பலாம். இந்த விஷயத்தில் தங்களுக்கு எங்கள் மேல் கொஞ்சமும் வருத்தமில்லையென்று மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டும். அதோடு தங்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம் எவ்வளவோ, அவ்வளவையும், தாங்கள் எங்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்களுடைய மனசு சாந்தப்படும்' என்று நயமாகவும், வணக்கமாகவும் கூறினாள்.

பூஞ்சோலையம்மாள், 'அம்மா! அன்றையத்தினமே தங்களுடைய தமயனார் என்னுடைய குழந்தைகளிடத்தில் சொன்ன சங்கதிகளையெல்லாம் நான் கேள்வியுற்றேன். தங்கள் தமயனார் வேண்டுமென்று எதையும் செய்யவில்லையென்றும், அவர்மேல் எங்களுக்குக் கொஞ்சமும் வருத்தம் இல்லையென் றும், என்னுடைய மூத்த குழந்தை அன்றைய தினமே சொல்லியிருக்கிறாளே! இன்னமும் தாங்கள் இருவரும் இதைப் பற்றி ஏன் சஞ்சலப்படவேண்டும்? அன்றைய தினம் இராத்திரி இந்தக் குழந்தைகள் வந்து விவரங்களையெல்லாம் சொன் னார்கள். உயிர்ச்சேதம் நேராமல் நல்ல வேளையாக அவர்கள் திரும்பி வந்து சேர்ந்தார்களே என்று நாங்கள் அது முதல் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோமேயன்றி, எதைப் பற்றியும் விசனிக்கவும் இல்லை, தங்களுடைய தமயனாரைப் பற்றி நாங்கள் கொஞ்சமும் வித்தியாசமாக நினைக்கவும் இல்லை. ஆகையால், தாங்கள் அந்த விஷயத்தைப் பற்றி எங்க ளுக்கு எவ்வித உபசாரமும் சொல்லவே தேவையில்லை. அந்த விஷயத்தில் எங்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை. குதிரையின் கால் புண் அநேகமாக சொஸ்தமாகி விட்டது. வண்டியின் சக்கரங்கள் இரண்டுதான் முறிந்து போய்விட்டன. அவைகள் ஐம்பது அறுபது ரூபாய் பெறும். அந்த அற்பத்