பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

செளந்தர கோகிலம்



எங்களுக்குத் தாயார் இறந்து போய்விட்டார்கள். தகப்பனார் எங்களுடைய சமஸ்தானத்திற்கு ஒர் அவசர ஜோலியாகப் போயி ருக்கிறார். என்னுடைய தமயனார் இதுவரையில் படித்துக் கொண்டிருந்து இப்போது தான் படிப்பை நிறுத்தினார். அவரைப் படிக்க வைப்பதற்கென்றே நாங்கள் இங்கே ஒரு பங்க ளாவை விலைக்கு வாங்கினோம். அநேகமாக நாங்கள் எப்போதும் இந்த ஊரிலேதான் இருப்போம். எங்களுடைய தகப் பனார், சமஸ்தானத்துக்கு அப்போதைக்கப்போது போய்விட்டு வருவார்கள்' என்றாள்.

பூஞ்சோலை:- ஒகோ அப்படியா! தங்களுடைய பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் துண்டுகிறது. ஆனால் கேட்பதற்கு துணிவு உண்டாகவில்லை.

யெளவன ஸ்திரீ:- (மகிழ்ச்சியோடு நகைத்து) சரி சரி மனித ருடைய யெனரென்ன சிதம்பர ரகஸியமா? அதை மற்றவர் உபயோகிப்பதற்காகத்தானே பெயர் வைக்கப்படுகிறது. அப்படி இருக்க, என்னுடைய பெயரைத் தாங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே. அதைப் பற்றிக் கேட்கத் துணிவு கூட உண்டாக வேண்டுமா என்னிடத்தில் ஏதாவது தியாகம் கேட்கிறீர்களா? என்னைப் புஷ்பாவதி என்று கூப்பிடுவார்கள். என்னுடைய தமயனாருடைய பெயர் சுந்தரமூர்த்தி என்பார்கள். பூஞ்சோலை:- (மிகுந்த மகிழ்ச்சியும், புன்னகையும் தோற்றுவித்து) அம்மா! தங்களிடத்தில் நல்ல பெருந்தன்மையும் கபடமின்மையும், எல்லோரிடத்திலும் அன்னியோன்யமாக நடந்து கொள்ளும் சரஸ் குணமும் பூரணமாக நிரம்பி இருக்கின் றன. இப்படிப்பட்ட அருமையான மனிதராகிய தங்களுடைய நட்பும் பிரியமும் எங்களுக்கு நீடித்திருக்க வேண்டும். தாங்கள் இதோடு எங்களை மறந்துவிடக் கூடாது. அடிக்கடி நாங்களும் தங்களுடைய ஜாகைக்கு வருகிறோம். தாங்களும் இங்கே வந்து சந்தோஷமாக இருந்து விட்டுப் போக வேண்டும்.

புஷ்பாவதி:- (திரம்பவும் குதூகலமாகப் பேசத் தொடங்கி) அம்மா! நானும் இதே சங்கதியைக் கேட்டுக்கொள்ளத்தான் நினைத்தேன். அதைத் தாங்களே சொல்லிவிட்டீர்கள். தாங்கள் வயதிலும் அனுபவத்திலும் என்னைவிடப் பெரியவர்கள் அல்