பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான் 139

லவா! ஆகையால் தாங்கள் முந்திக் கொண்டீர்கள். இருந்தாலும் பாதகமில்லை. எள்ளின் செடி எண்ணெயாகவே காய்த்ததுபோல ஆகிவிட்டது. நான் இன்றையத் தினம் தங்களையெல்லாம் தரிசித்து என் தமயனாருடைய பிழையை r மிக்கும்படி கேட்டுக் கொள்ள வந்தது முக்கியமான காரியமாக இருந்தாலும், நான் இங்கே வந்ததற்கு அதைவிட முக்கியமான இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்முடைய பழக்கமும் சிநேகமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமென்று தாங்கள் இப்போது சொன்னிர்களல்லவா? அந்த விருப்பமானது, நான் கோரிவந்த காரியம் பலிதமாகுமானால், கைகூடிவிடும்.

பூஞ்சோலை:- (மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்து) அப்படியானால், நம்முடைய சிநேகம் நிரந்தரமாயிருப்பதற்குத் தாங்கள் ஏற்கனவே ஏதோ திட்டம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. அப்படியானால் அதைத் தாங்கள் வெளியிட யோசனையென்ன?

புஷ்பாவதி:- வேறொன்றுமில்லை. இப்போது முதலில் என்னுடைய தமயனாருக்குக் கலியாணம் ஆக வேண்டும். அதற்காகப் பல இடங்களிலிருந்து பெரிய மனிதர்களும் ஜெமீந் தார்களும் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். என்னுடைய தமயனாரும், தகப்பனாரும் அந்தந்த இடங்களுக்குப் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். ஆனால், இது வரையில் பார்த்த நூற்றுக்கணக்கான இடங்களில் ஒன்று கூட எங்களுக்குப் பிடிக்கவில்லை. எங்களுடைய சமஸ்தானத்தில் 35 கிராமங்கள் இருக்கின்றன. எங்களுடைய வருஷ வருமானம் சுமார் 2 லட்சத்துக்கு மேல் இருக்கும். அவ்வளவுக்கும் என்னு டைய தமயனார் ஒருவரே வாரிசுதாரர். ஆகையால், எங்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவர்களைத் தவிர மற்றவர்களிடத்தில் சம்பந்தம் செய்து கொள்ள எங்களுக்குப் பிரியமில்லை. அதுவும் தவிர, என்னுடைய தமயனார் பெண்ணின் குணா குணங்களை அறிந்து கொள்வதில் மகா சமர்த்தர். பெண் நல்ல அழகுடை யதாக இருப்பதோடு அடக்கம், புத்திசாலித்தனம் முதலிய சகல மான குணங்களும் வாய்த்தவளாக இருக்க வேண்டும் என்பது அவருடைய முக்கியமான கோரிக்கை, இந்த மேம்பாடுகள் இருக்