பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

செளந்தர கோகிலம்



ஏற்றுக் கொள்ளத் தங்களுக்கு இஷ்டந்தானா? அவர் போய் விட்டால், ஒரு பெருத்த சமஸ்தானமே வாரிசு இல்லாமல் அழிந்து போய் சர்க்காரைச் சேர்ந்துவிடும். தம்முடைய பிள்ளையை எமனுக்குப் பறிகொடுத்து என் தகப்பனார் ஒரு நிமிஷ நேரமும் சகித்திருக்க மாட்டார். இதையெல்லாம் தாங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்த்து எங்களிடத்தில் இரக்கங் கொள்ள வேண்டும். தங்களுடைய சின்னக்குழந்தையை இந்த அம்மாளுடைய குமாரருக்குக் கட்டுவதனாலும், இவர்களுக்கு எந்தவிதக் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகப் போகிறதில்லை. அப்படிக் கட்டினால், இரண்டு மனிதர்களின் உயிரைக் காப் பாற்றிய பெரும் புண்ணியம் இந்தக் கற்பகவல்லியம்மாளுக்கும் சித்திக்கும்; தங்களுக்கும் சித்திக்கும்; தாங்கள் எப்படியாவது தயைகூர்ந்து எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று நயந்து பணிவாகக் கூற, அவளது கனிவானச் சொற்களைக் கேட்டு மனது இளக்க மடைந்த பூஞ்சோலையம்மாள் அதற்குத் தான் என்ன மறுமொழி சொல்வது என்பதை உணராமல் சிறிது நேரம் தயங்கி நின்ற பின் புஷ்பாவதியை நோக்கி, 'அம்மா! தாங்கள் இப்படியே ஒரு நிமிஷ நேரம் இருங்கள். இந்த விஷயத்தில் நானே சுயமாக எவ்வித முடிவும் செய்வது சரியல்ல; இந்தக் கற்பகவல்லி யம்மாளையும், என்னுடைய பெண்கள் இருவரையும் தனியாக அழைத்துப் போய் வைத்துக்கொண்டு அவர்களுடைய அபிப் பிராயம் என்ன என்பதை அறிந்து வந்து என்னுடைய முடிவைத் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று கூற, புஷ்பாவதி மிகுந்த மகிழ்ச்சியோடு அதற்கு இணங்கினாள்.

உடனே பூஞ்சோலையம்மாள், கற்பகவல்லியையும், தனது பெண்களையும் அழைத்துக் கொண்டு அந்த விடுதிக்குப் பக்கத்தில் இருந்த வேறொரு மறைவான இடத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

அதன் பிறகு அரை நாழிகை கழிந்தது; பூஞ்சோலையம் மாளும், கற்பகவல்லியம்மாளும் திரும்பி வந்து முன்பு இருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள் உடனே பூஞ்சோலை யம்மாள் புஷ்பாவதியை நோக்கி, ‘அம்மா இப்போது, என்னு