பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - வது அதிகாரம் மோகனாஸ்திரப் பிரயோகம்

ஷ்பாவதி என்னும் மாது பூஞ்சோலையம்மாளது ! L-| & பங்களாவிற்கு வருமுன் அவ்விடத்தில் இருந்தோர்

వ யாவரும் எவ்விதக் கவலையும், சலனமும் இன்றி క్షీడ్లి த ஆனந்தமும் குதூகலமுமே நிறைவாக இருந்தனர். ஆனால், அவள் வந்து கலியாணப் பேச்சைப் பேசிவிட்டுப் போனது, கலக விதை விதைத்துப் போனது போல் இருந்தது. செளந்தரவல்லியைத் தவிர, மற்ற எல்லோர் மனதிலும் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரின் பரிதாபகரமான நிலைமையை உணர்ந்ததனால் ஒருவித இரக்கமும், அநுதாபமும் தோன்றி வதைத்துக் கொண்டிருந்தன. கற்பகவல்லியம்மாளது மனதில் ஒருவிதக் கவலையும், அச்சமும் இடையிடையே எழுந்து சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தன. தங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேம்பட்ட மனிதர்களான கோவிந்தபுரம் ஜெமீன்தாரது வீட்டில் கோகிலாம்பாளைக் கொடுக்க அவர்கள் ஒருவேளை இணங்கி விடுவார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது. ஆனாலும், கோகிலாம்பாள் மனோதிடமும், உறுதியும் உடைய உத்தம குண மடந்தையாதலால், அவள் ஒருதரம் செய்த தீர்மானத்தை மாற்ற இடங்கொடுக்க மாட்டாள் என்ற எண்ணமும் தோன்றியது. அப்படியே அவர்கள் கோகிலாம்பாளை கோவிந்தபுரத்து வீட்டில் கலியாணம் செய்து கொடுக்க நேர்ந்தாலும் இளைய பெண்ணான செளந்தர வல்லியை அவர்கள் தனது பிள்ளைக்குக் கொடுத்தாலும், அதுவே தங்களுக்குப் போதுமானது என்று கற்பகவல்லியம்மாள் எண்ணிமிட்டுக் கொண்டிருந்தாள்.

பூஞ்சோலையம்மாளும், கோகிலாம்பாளும் ஒன்றுகூடித் தனியாக இருந்து தங்களுக்குள் ஒருவித முடிவிற்கு வந்திருந்தனர். புஷ்பாவதி தனது தமயனிடத்தில் எல்லா விஷயங்களையும்