பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

செளந்தர கோகிலம்



தெரிவித்து முடிவைக் கண்டு எழுதுவதாகச் சொன்ன கடிதத்தில், அவர்கள் செளந்தரவல்லியைக் கலியாணம் செய்துகொள்ளப் பிரியப்படுவார்களானால், தாங்கள் இருவரும் உடனே புறப் பட்டு, அவர்களது பங்களாவிற்குப் போய், அவர்களது குடும்ப விஷயங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு அண்டையிலுள்ள மனிதர்களிடத்திலும் விசாரித்து அறிந்துகொண்டு, அதே முகூர்த்தத்தில் செளந்தரவல் வியை கோவிந்தபுரம் ஜெமீன்தாரது புதல்வனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பது என்று அவர்கள் இருவரும் தமக்குள் தீர்மானம் செய்துகொண்டு, புஷ்பாவதியின் கடித வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். நிற்க. அவர்கள் கற்பக வல்லியம்மாளிடத்தில் இன்னொரு விஷயமும் கேட்டுக் கொண்டனர். கலியாணம் நிறைவேறும் வரையில் கற்பகவல்லி யம்மாளும், கண்ணபிரானும் தங்களது பங்களாவிலேயே இருந்து விட வேண்டும் என்றும், கண்ணபிரான் ஒரு மாசத்து ரஜாவிற்குக் கடிதம் எழுதி அனுப்பி விட வேண்டும் என்றும், அவர்கள் கற்பகவல்லியம்மாளிடத்தில் கேட்டுக் கொள்ள, அவள் கண்ணபிரானிடத்தில் தனியாக கலந்து யோசனை செய்து, புஷ்பாவதியம்மாளது விஷயம் ஒருவிதமாகத் தீருகிற வரையில் தாங்கள் அந்த பங்களாவில் இருப்பதே யுக்தமான காரியம் என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களது வேண்டுகோளின்படியே தாங்கள் செய்வதாக உறுதி கூறினர். கோகிலாம்பாளும், கண்ணபிரானும் ஒருவரையொருவர் நினைத்து உருகித் தவித்து ஓயாத விரக வேதனையில் ஆழ்ந்து பகற் கனவு கண்டு கொண்டிருந்தனர்.

செளந்தரவல்லியின் பிரியம் முழுதும் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரது புத்திரர் மீது வீழ்ந்துவிட்டதாகையால், தான் கவியாணம் செய்து கொள்ள நேர்ந்தால், அவரையே கலி யாணம் செய்து கொள்ளுவது என்றும், இல்லையானால் தான் விஷத்தைத் தின்று தன் உயிரையே மாய்த்துக் கொள்வது என்றும், அவள் அப்போதே தீர்மானம் செய்து கொண்டு விட் டாள். அந்த ஜெமீன்தாரின் புத்திரர் தன் மீது ஆசை வைக்காமல், தனது அக்காளின் மேல் ஆசை வைத்து அவளையே நினைத்து வருந்திக் கிடப்பதாகப் புஷ்பாவதி சொன்னதையும், தனது தாய்