பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 149

தன்னை அவருக்குக் கொடுப்பதாகப் பிரஸ்தாபித்ததைக் கேட்ட புஷ்பாவதி அதை ஒப்புக் கொள்ளாமல் மறுத்ததையும் கேட்டது முதல் செளந்தரவல்லிக்கு தனது அக்காளான கோகிலாம் பாளைப் பற்றி ஒருவிதப் பொறாமையும், வயிற்றெரிச்சலும், அகங்காரமும் தோன்றிப் பெருகிக் கொண்டேயிருந்தன. புஷ்பாவதி புறப்பட்டுப் போனபோது கட்டிலில் படுத்த செளந்தரவல்லி மிகுந்த கவலையும், துயரமும், கடுகடுப்பும் தோற்றுவித்தவளாகவே இருந்தாள். போஜனம் முதலியவைகளை முடித்துக் கொள்ளும்படி வேலைக்காரிகள் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி அழைத்துப் பார்த்தது எல்லாம் வீணாயிற்று. பூஞ்சோலையம்மாள் அடிக்கடி அவளிடத்தில் வந்து அவளுக்கு நம்பிக்கையும், மனோதிடமும் உண்டாகும்படியான வார்த்தை களைக் கூறி, தாங்கள் எப்பாடு பட்டாகிலும் அவளது பிரியப் படி கலியாணத்தை முடித்து வைப்பதாகவும், அவள் அதைப் பற்றி வருந்த வேண்டாம் என்றும் நயந்து கூறினாள். அப்போதும் அவள் அதற்கும் வழிக்கு வராமல் கல்போல உறுதியாகப் படுத்தி ருந்தாள். அதன் பிறகு கற்பகவல்லியம்மாள், கோகிலாம்பாள், வேலைக்காரிகள் முதலிய மற்ற பெண்டீரும் ஒருவர் பின் ஒருவராகப் போய் அவளைத் தேற்ற முயல, அவளது துக்கமும், ஆத்திரமும் அதிகரித்தனவேயன்றி, குறையவில்லை. அவளிடத் தில் யாராகிலும் போனால், "புஷ்பாவதி இடத்திலிருந்து கடிதம் வந்ததா?’ என்ற கேள்வியையே அவள் மிகுந்த ஆவலோடு கேட்பாள். கடிதம் வரவில்லை என்ற மறுமொழி கேட்டவுடன் அவள் மறுபடியும் தனது சிரத்தைக் கவிழ்த்துப் படுக்கையில் புதைத்துக்கொண்டு மெளனம் சாதிப்பாள். அவ்வாறு அன்றைய மாலைப்பொழுது கழிந்தது. இரவும் வந்துவிட்டது. ஆனால் கடிதம் மாத்திரம் வரவில்லை.

பூஞ்சோலையம்மாளும், கோகிலாம்பாளும் நிச்சயதார்த்தம் முதலிய காரியங்களுக்கு ஆக வேண்டிய ஏற்பாடுகளிற்கெல்லாம் இடையிடையே உத்திரவுகள் பிறப்பித்துக் கொண்டபடியே செளந்தரவல்லியின் பிணக்கைத் தீர்த்து அவளை எப்படி எழுப்புவதென்று யோசித்து யோசித்துத் தம்மால் ஆன தந்திரங்களையெல்லாம் செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு அந்தக் கடிதம் எப்போது வரும் வருமென்று அவர்கள்