பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

செளந்தர கோகிலம்



அடுத்த மாதத்தில் ஒரு நாள் பார்த்து நடத்திக் கொள்ளலாம் என்றும், அதுவரையில் தங்களிடம் அவகாசம் கேட்டுக் கொள்ளும்படியும், தங்களுடைய மூத்த குழந்தையின் கலியாணத்தை இப்போதே முதலில் நடத்துவதோ, அல்லது இரண்டையும் ஒன்றாக நடத்துவதோ தங்களுடைய பிரியத்தைப் பொறுத்த விஷயங்கள் என்று தங்களுக்குத் தெரிவிக்கும்படியும் எங்களுடைய தகப்பனார் எழுதி இருக்கிறார்கள்.

ஆகையால், தங்களுடைய கனிஷ்ட குமாரியான செளபாக் கியவதி செளந்தரவல்லியம்மாளை நாங்கள் கலியாணம் செய்து கொள்வது முடிவாய் நிச்சயிக்கப்பட்ட மாதிரியே தாங்கள் எண்ணிக்கொள்ளலாம். ஆனால், முகூர்த்த தினத்தை மாத்திரம் அடுத்த மாதத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமாக நாங்கள் நிரம்பவும் மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறோம். மூத்த குழந்தையின் கலியாணத்தை அடுத்த மாதத்தில் ஒத்தி வைக்க வேண்டும் என்பதில்லை. தங்களுக்கு ஏராளமான சம்பத்து இருக் கிறது. அதுபோல ஈசுவரன் எங்களுக்குக் கொஞ்சம் செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு கலியாணத்தையும் தனித்தனியாக நடத்துவதால் நம்முடைய குடி முழுகிப் போய்விடப் போவ தில்லை. இரண்டு சமயங்களில் நாம் அனுபவிக்க வேண்டிய இரட்டிப்பு சந்தோஷத்தை நாம் கெடுத்துக் கொண்டு அதை ஒரே தடவையில் அனுபவிப்பதும் உசிதமான காரியமல்ல. தங்களுடைய மூத்த குழந்தையின் கலியாணம் அடுத்த வாரத்தில் நடக்குமானால், அப்போது நாங்களும் வந்திருந்து விருந்துண்டு களித்திருந்து ஆநந்தம் அடைவதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறோம். -

ஆகையால், தாங்கள் எல்லா விஷயங்களையும் தீர்க்காலோ சனை செய்து தயை கூர்ந்து தங்களுடைய முடிவான அபிப்பிரா யத்தைத் தெரிவிக்குமாறு நிரம்பவும் கேட்டுக் கொள்ளும்,

தங்களிடம் பிரியமும் நன்றியறிதலுமுள்ள புஷ்பாவதி

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைக் கோகிலாம்பாள் படித்து முடித்தாள்.