பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

செளந்தர கோகிலம்



இடம் உண்டாகும்; நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அது திருப்தியுண்டாகாது. ஆகையால், அந்தக் கலியாணம் நடக்கும்போது, இது பழைய கதையாகிவிடும். இந்த விஷயத்தை நீங்கள் செளந்தரவல்லியிடத்தில் பக்குவமாகச் சொல்ல வேண் டும்; எப்படியென்றால், இந்தச் சம்பந்தம் ஏழைச் சம்பந்தமென் றும், இதையும் அவளுடைய கலியாணத்தோடு சேர்த்து நடத்தி னால், அவளுடைய புருஷனைச் சேர்ந்தவர்கள், மாப்பிள்ளை வீட்டார் இருவருள் தாங்களே பிரமாதமான மனிதர்கள் என்று நினைத்து மமதைக் கொண்டு அவளைக் கேவலமாக மதிப்பார் கள் என்றும், இந்த ஏழைக் கலியாணம், அதோடு நடந்தால், அவளுக்குத் தலைகுனிவாக இருக்கும் என்று நீங்கள் அவளி டத்தில் சொன்னால், அவள் எவ்வித ஆட்சேபமும் சொல்லாமல் இதற்கு எளிதில் இணங்கி விடுவாள். இந்தக் கலியாணத்தை முடித்துக் கொள்வோம். அதன் பிறகு, நமக்குத் தேவையான அவகாசம் இருக்கிறது. இந்த கோவிந்தபுரத்தார் எப்படிப்பட்ட வர்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் தக்க மனிதர்களா என்பதைப் பற்றியும், நாம் பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டு அதற்கு மேல் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இவள் ஆத்திரப்படுகிறாள் என்று முன் பின் தெரியாத மனிதர் வீட்டில் கொண்டு போய் இவளைக் கொடுத்துவிட்டு நாம் பிற்பாடு தவிக்கக் கூடாது. எனக்கு வரும் மனிதர்கள் ஏழ்மை நிலமையில் உள்ளவர்கள். இவர்களைப் பற்றி நாம் நெடுநாளாகக் கேள்வியுற்றும் இருக்கிறோம். இவர்கள் நம்மை மீறித் தாறுமாறாக நடக்கக் கூடியவர்கள் அல்ல. செளந்தரவல்லியோ பணக்காரர் வீட்டிலேதான் வாழ்க்கைப்படுவேன் என்று ஒரே பிடியாகப் பிடிக்கிறாள். அவர்கள் நல்ல குணமும், நல்ல நடத்தையும் உள்ள மனிதர்களா, அல்லது, துஷ்டர்களா என்பதை நன்றாக அறிந்து கொள்ளாமல், நாம் கொடுத்து விட்டால், பிற்பாடு செளந்தரவல்லி நிரம்பவும் துயரத்துக்கு ஆளாகி விடுவாள்' என்றாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாளும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து, "நீ சொல்வது எல்லாம் நல்ல யோசனைதான். அப்படியே செய்து விடுவோம். அதிருக்கட்டும்; இந்தக் கடிதத்துக்கு நாம் இப்போது ஏதாவது பதில் எழுத