உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 155

வேண்டுமே! நாம் அவர்களைப் பற்றி விசாரிக்கப்போகிறோம் என்பதை நாம் தெரிவித்தால், அவர்களுக்கு மனம் உடைந்து போகும். அவர்கள் வேறே இடம் பார்த்துக் கொள்வார்கள். பிறகு, நமக்கு வேண்டுமானால் இந்த இடம் அகப்படாமல் போய்விடுமே; அதற்கென்ன செய்கிறது?’ என்றாள்.

கோகிலாம்பாள், 'நாம் நிரம்பவும் சாதுர்யமாகக் கடிதம் எழுத வேண்டும். நாம் அவர்களுக்குப் பெண்ணைக் கொடுக்கத் தீர்மானித்து விட்டது போலவும் இருக்க வேண்டும். பிறகு நம் முடைய இஷ்டப்படி முடிவு செய்யவும் இடமிருக்க வேண்டும். எப்படி என்றால், அவர்களுடைய கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களைப் படித்து நாம் நிரம்பவும் சந்தோஷப்படுகிறோம் என்றும், செளந்தரவல்லியை அவர்களுடைய வீட்டில் கட்டிக் கொடுக்க நமக்குப் பரிபூரணமான விருப்பம் இருக்கிறது என் றும், என் கலியாணம் அடுத்த வாரத்திலேயே நடக்கிறது என் றும், இதற்கு அவர்களெல்லாம் வந்திருந்து இதை நடத்தி வைத்து கெளரவப்படுத்த வேண்டும் என்றும், இந்தக் கலியாணம் முடிந்த பிறகு, அவர்களுடைய தகப்பனார் தமது சமஸ்தானத்திலிருந்து வந்தவுடனே அந்த விஷயத்தை அவர்கள் தயை கூர்ந்து நமக்குத் தெரிவித்தால், நாம் உடனே கோவிலில் பூ வைத்துப் பார்த்து விட்டு, தெய்வத்தின் உத்தரவானால், உடனே புறப்பட்டு, சகுனம் பார்த்துக் கொண்டு அவர்களுடைய ஜாகைக்கு வருகிறோம் என்றும், இந்த ஏற்பாடுகளை அவர்கள் முழுதும் உறுதியாக எண்ணி நம்பி இருக்கலாம் என்றும், அவ்விடத்தில் உடனே புரோகிதரை வரவழைத்து முகூர்த்தத்தில் நாள் பார்த்து லக்னப் பத்திரிகை தயாரித்துக்கொண்டு, மற்ற எல்லா ஏற்பாடு களைப் பற்றியும் நேரில் கலந்து யோசித்து முடிவு செய்து கொள் வோம் என்றும், நாம் ஒரு கடிதம் எழுதி இப்போதே அவர்க ளுக்கு அனுப்பி விடுவோம். பிறகு நாம் அவர்களுடைய யோக்கி யதையைப் பற்றி விசாரிப்போம்; திருப்திகரமாக இருந்தால், கலியாணத்தை நிறைவேற்றுவோம். மனசுக்குப் பிடிக்கா விட்டால் சகுனம் ஆகவில்லை என்றாவது, புஷ்பம் போட்டுப் பார்த்ததில் சுவாமி உத்தரவு கொடுக்கவில்லை என்றாவது சொல்லி மெதுவாக நழுவ விட்டு விடுவோம்” என்றாள்.