பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

செளந்தர கோகிலம்



அவளது சமயோசிதமான யுக்தியைக் கேட்டு மிகுந்த சந்தோஷமும், பூரிப்பும் அடைந்த பூஞ்சோலையம்மாள், அவள் சொன்ன ஏற்பாடுகளையெல்லாம் அப்படியே ஒப்புக் கொண்ட வளாய், "சரி! உன்னுடைய பிரியப்படியே செய்வோம். நீ போய், அவர்களுக்கு எழுத வேண்டிய கடிதத்தை எழுது. அதற்குள் நான் போய், செளந்தரவல்லிக்கு இந்தக் கடிதத்தை காட்டி அவளைச் சந்தோஷப்படுத்தி அழைத்துக் கொண்டு வருகி றேன்” என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டு செளந்தரவல்லி இருந்த இடத்திற்குச் சென்றாள். கோகிலாம்பாள் எழுது கருவிகள் இருந்த ஒர் இடத்திற்குப்போய் புஷ்பாவதிக்கு மறுமொழி எழுதினாள். பூஞ்சோலையம்மாள் செளந்தர வல்லியிடத்தில் போய், புஷ்பாவதியின் கடிதத்தைக் காட்டி, கோகிவாம்பாள் சொல்லிக்கொடுத்தபடி நிரம்பவும் தந்திரமாகப் பேசி, அவள் தனது இயற்கையின்படி சந்தோஷமாக இருக்கவும், தனது கலியாணத்தை அடுத்த மாதத்தில் நடத்திக்கொள்ள இணங்கவும் செய்வது பகீரதப் பிரயத்தினமாகி விட்டது; அவள் அந்த ஏற்பாடுகளிற்கு எல்லாம் ஒருவாறு இணங்கினாள். ஆனாலும், அவளது மனதில் கோகிலாம்பாளின் மீது இருந்த அதிருப்தி இருந்து வந்தது. எப்படியெனில், கடற்கரையில் அபாயம் நேரிட்ட அன்றைய தினம், தான் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரிடத்திலும், கண்ணபிரானிடத்திலும் பேச முயன்றதைக் கோகிலாம்பாள் தடுத்து, எல்லோருக்கும் அவளே மறுமொழி கொடுத்துத் தானே அதிக புத்திசாலி என்று அவள் காட்டிக் கொண்டதினாலேதான், எல்லோரும் தன்னை அவமதித்து, வேண்டாம் என்று தள்ள நேர்ந்தது என்ற எண்ணம் செளந்தரவல்லியின் மனதிலிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. கோகிலாம்பாள் மகா சுத்தமான மனுஷிபோல இருந்தே கலியாணத்தை மாத்திரம் தந்திரமாக நிச்சயித்துக் கொண்டாள் என்றும், அவள் எல்லாக் காரியங்களையும் கபடமாகவே செய்து தன்னை மாத்திரம் தலையெடுக்க விடாமல் அநாவசியமாக அடக்கி அதிகாரம் செய்து கொண்டே போகிறாள் என்றும், செளந்தரவல்லியின் மனதில் ஒரு நினைவு தோன்றி வதைத்துக் கொண்டே இருந்தது. ஆகையால், அவள் தனது தாயினிடத்தில் மாத்திரம் சாதாரணமாக நடந்து கொண்டாளன்றி, கோகிலாம்