பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 157

பாளோடு பேசாமல் அவளைக் காணும்போதெல்லாம் முகத்தைச் களித்து அப்பால் திருப்பிக் கொண்டாள். அந்த நிலைமையில், நிச்சயதார்த்தத்திற்கும், கலியாணத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகள் யாவும் அதி தீவிரத்தில் நடத்தப்பட்டன. ஐந்நூறு ஆட்கள் ஒன்று கூடி முனைந்து இராப்பகல் வேலை செய்து, அந்த பங்களா முழுவதையும் இந்திர விமானம் போல ஜோடித்து எங்கு பார்த்தாலும், ஒட்டு வேலைகள் நிறைந்த கொட்டகைப் பந்தல் களும்; வாழை மரங்கள், தோரணங்கள், திராட்சைக்குலைகள், இளநீர்க்குலைகள், பாக்குக் குலைகள், பனங்குலைகள், ஈச்சங் குலைகள், வாழைத்தாறுகள், பூசணிக்காய்கள், தேர்ச்சீலைகள் முதலிய தொங்கல்களுமே மயமாக நிறைத்து விட்டனர். நிச்சய தார்த்த தினத்திற்கு முதல் நாளைய மாலையிலிருந்தே உறவினரும் விருந்தினரும் வந்து திரண்டு கொண்டிருந்தனர். அவ்வாறு வந்து கூடும் ஜனங்களது போஜன பானாதிகளைத் தயாரிப்பதற்கு 25 சமையக்காரர்களும், எவர் எந்தச் சமயத்தில் எதைக் கேட்டாலும் கொடுப்பதற்காக 30 பரிசாரகர்களும், வருவோரை வாருங்கள் என்று சொல்லி உபசரித்து வரவேற்று உட்புறத்தில் அழைத்துப் போய் ஆசனங்களில் அமர்த்துவதற்காக இருபது டலாயத்துகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். வருவோர் எல்லாரும் இரவில் செளகரியமாக சயனித்துக் கொள்ள ஒரு பெருத்த மேன்மாடம் முழுவதும் வழுவழுப்பான ஜமக்காளம் பரப்பப் பெற்று, திண்டு"தலையணைகளே மயமாக நிரப்பப் பெற்றிருந்தது. அவ்வாறு அந்த மாளிகை சகலமான சம்பிரமங் களும் முஸ்தீபுகளும் நிறைந்து, ஒரு மகாராஜனது கலியாண அரண்மனை போல இருந்தது.

அப்போது கண்ணபிரான் புதிய மனிதனாகக் காணப்பட் டான். நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாளே அவனுக்கு உயர்வான ஆடை ஆபரணங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டன; காதில் ஐயாயிரம் ரூபாய் பெறத்தக்க இரண்டு வைரக் கடுக்கன்கள், பத்து விரல்களிலும் வrம் ரூபாய்க்கு மேல் பெறத் தக்க நவரத்ன மயமான மோதிரங்கள், கையில் காப்பு கொலு சுகள், கழுத்தில் வைர ஹாரம், பதக்கம், இடுப்பில் ஐந்நூறு ரூபாய் பெறத்தக்க பீதாம்பரம், தங்க அரைஞாண் தோளில் ஜரிகைளே நிறைந்த பட்டு உருமாலை முதலிய ஆடையா