பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 159

வென்ற ஐயமே எழுந்து எழுந்து அவனை வதைத்துக் கொண்டி ருந்தது. தான் அத்தகைய பெருத்த சீமாட்டியின் மாளிகையில் அவ்வளவு அபாரமான செல்வங்களின் இடையில் இருப்பது பொய்யோ பொய்யோவென அப்போதும் அவன் சந்தேகம் உற்றவனாகவே இருந்தான். ஆனால், மற்ற சகலமான செளகரி யங்களும், சுகங்களும், ஆடை ஆபரணங்களும், செல்வாக்கும் அப்போதே தனக்கு எதேஷ்டமாகக் கிடைத்திருந்தும், தனது மனத்தைக் கொள்ளைகொண்ட அருங்குண மணியான கோகிலாம்பாளை, தான் இரண்டு தினங்களாக கண்ணாலும் பார்க்கக் கூடவில்லையே என்ற ஏக்கமே அவனது மனத்தையும், தேகத்தையும் உருக்கிக் கொண்டிருந்தது. முதல் நாள் தற்செயலாகத் தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தவள் கோகி லாம்பாளாக இருக்கக் கூடாதா என்ற நினைவும் தோன்றியது. மறுநாள் நிச்சயதார்த்தத்திற்காக ஜனங்கள் ஏராளமாக வந்து கூடி இருப்பார்கள். ஆதலால், அப்போது கோகிலாம்பாள் சுத்தமாகத் தனது கண்ணிலே படமாட்டாள் என்ற நினைவும் தோன்றியது. அதன் பிறகு எட்டு நாட்களில் கலியாண முகூர்த்தம் நடந்தா லும், அப்போதும் அவள் தன்னோடு பேசாமலேதான் இருப்பாள் என்ற ஏக்கமும், தனக்கும் அவளுக்கும் சாந்தி கலியானம் நடந்தால் அன்றி, தான் அவளைத் தனிமையில் கண்டு பேச சாத்தியப்படாது என்ற நிச்சயமும் ஏற்பட்டன. கலியாண முகூர்த்தத்திற்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து அவர்கள் சாந்தி முகூர்த்தத்தை வைத்துக் கொள்வார்களோ என்ற கவலை யினால் அவன் பெரிதும் உலப்பப்பட்டவனாக இருந்தான். அங்கே வந்து கூடிய விருந்தினரில் யெளவனப் பருவத்தினராக இருந்த சில ஆண்பிள்ளைகள் அவனோடு பேசி, நெருங்கி அன்னியோன்னியமாக இருக்க முயன்றாலும், அவர்களது சேர்க்கையெல்லாம் அவனுக்குத் - துன்பகரமாக இருந்ததேயன்றி இன்பமே பயக்கவில்லை. அத்தனை வைபவங்கள் நிறைந்த மாளிகைக்குள் அவனுக்கு இருக்கையே கொள்ளவில்லை. எங்கே சென்றாலும், எங்கே உட்கார்ந்தாலும், அவனது சஞ்சலம் அதி கரித்துக் கொண்டே போனது. ஆகையால், அவன் நிச்சயதார்த்தத் தினத்திற்கு முதல் நாள் மாலையில் அந்தக் கட்டிடங்களை விட்டு பூஞ்சோலைக்குள் போய் சிறிது நேரம் உலாவி