பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 165

அடிவரையில் கடாசுரித்துக் கொண்டே வர, அவனது பார்வை ஊஞ்சற் பலகையின் கீழே தொங்கிய அவளது இடது காலின் மீது சென்றது. தந்தத்தில் கடைந்து எடுக்கப்பட்டது போல சுத்தமாகவும், பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறமும், மிருதுத் தன்மையும், பாதரஸம், சிலம்பு, மெட்டி, பீலலி முதலிய ஆபரணங்களும் நிரம்பப் பெற்றிருந்த அந்த அதி அற்புதமான பாதத்தின் ஒப்பற்ற சிறப்பைக் கண்டு, “ஆகா! இப்படிப்பட்ட அபார சிருஷ்டியும் உலகத்தில் இருக்கிறதா' என்று வியப்புற்று நைந்து இளகி இரண்டொரு நிமிஷ நேரம் இமை கொட் டாமல் கண்ணபிரான் அதையே பார்த்திருக்க, அந்தப் பாதத்தின் அடியில் தரையின் மேல் கட்டைபோல நீளமாகக் கிடந்த ஏதோ ஒரு வஸ்து கண்ணபிரானது திருஷ்டியில் படவே, அவனது கவனம் உடனே அதன்மீது சென்றது. அவ்வாறு கட்டைபோலக் கிடந்தது மகா பயங்கரமான ஒரு நாகப்பாம்பாக இருக்க, அதை உணர்ந்த கண்ணபிரானது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்வதே எளிது அன்றி, விவரித்துச் சொல்வது அசாத்யமான காரியம். அவனது மனதில் பெருத்த திகிலும், வியப்பும், மலைப்பும் உண்டாயின. உடம்பு பதறு கிறது. கை கால்களெல்லாம் வெட வெட வென்று ஆடுகின்றது. குலை நடுக்கமும் மயிர்க்கூச்சமும் உண்டாயின. அந்த நாகப் பாம்பு உயிரோடு இருப்பதாகத் தோன்றின, ஆனாலும் இரை விழுங்கியதுபோல, அவ்விடத்தை விட்டு நகராமல் கிடந்தது. ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்திருந்த மடந்தை தனது காலைக் கீழே ஊன்றுவாளானால், பாம்பு அவளை உடனே கடித்துவிடு மென்ற பெருத்த கவலையும் அச்சமும் தோன்றின. தான் கோவெனப் பெருங்கூச்சல் செய்தால், ஒருகால் அந்தப் பாம்பு துள்ளி அதற்கு அருகிலிருந்த அவளது இடது காலைக் கடித்து விடுமோ என்ற எண்ணம் உண்டானதால், அவன் நிரம்பவும் பிரயாசைப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான். காலின் கீழ் பாம்பு இருக்கிறதென்று தான் மெதுவாகக் கூறி, அந்த நங்கையை எச்சரிக்கலாம் என்றால், பின்னால் யாரோ மனிதன் வந்திருக்கிறான் என்று நினைத்து திடுக்கிட்டு நாணமுற்று, அவள் எழுந்திருக்க முயல்வாளோ என்ற நினைவு உண்டானது. ஆகையால், அவளை எச்சரிப்பதும் உசிதமானதாகத் தோன்ற