பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

செளந்தர கோகிலம்



வில்லை. ஆகவே, அந்த மகா பயங்கரமான அபாய வேளையில் தான் என்ன செய்வது என்பதையும், அந்த மங்கையை எப்படிக் காப்பாற்றுவது என்பதையும், அறியாமல் இரண்டொரு நிமிஷ நேரம் தத்தளித்தான். ஒவ்வோர் இமைப்பொழுதும் ஒவ்வொரு பெருத்த யுகமாகத் தோன்றியது. அழகின் திரளாக இருந்த அந்தப் பெண்மணியின் கவர்ச்சியினால் அந்த நாகமும் வசீகரப் பட்டுப் போனதோ என்னலாம்படி, அது அவ்விடத்தை விட்டு நகராமலே கிடந்தது. ஆகவே, அவன் சிறிது நேரம் தவித்துத் தயங்கி, அவளை நோக்கி மெல்ல நடக்கலானான். தனது காலடி ஒசையைக் கேட்டு அவள் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டு ஊஞ்சலை விட்டுக் கீழே காலை வைத்து இறங்கப் போகிறாளே என்ற கவலை கொண்டவனாய், கண்ணபிரான் தனது காலின் விரல்களை ஊன்றி, ஒரு சிறிதும் ஒசை செய்யாமல் மெதுவாக நடந்து, ஊஞ்சற் பலகையண்டை நெருங்கினான். அந்த ஒவ் வொரு நொடியும் ஒவ்வொரு கற்ப காலமாகத் தோன்றி, அவனை நரக வேதனையில் ஆழ்த்தியது. அந்த மகா விபரீதமான அபாயத்திலிருந்து தான் அவளை விடுவிக்க எண்ணிப் போவதே அவளுக்கு விபத்தாக முடிந்து விடுமோ என்ற திகில் அவனை வதைத்துக் கொண்டிருக்க, அவன் கொஞ்சமும் சந்தடி செய்யா மலும், தான் நெருங்கி வருவதை மடந்தை அறியாதபடியும், ரோஜாப் புஷ்பத்தின் இதழ் புல் தரையில் விழுவது போல, அவ்வளவு மிருதுவாகத் தனது விரல்களைக் கீழே ஊன்றி ஊன்றி நடந்து, அந்தப் பெண்மணியின் முதுகண்டை போய்ச் சேர்ந்த வுடன், தனது முழு பலத்தையும் விசையையும் வெளிப்படுத்தி, தனது இடது கையை அவளது துடைகளின் கீழ் கொடுத்து வலது கையை முதுகுப் பக்கத்தில் அணைத்து ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் அவளைச் சடேரென்று அலாக்காய்த் தூக்க, அவளது கைப்பிடிகள் உறுதியாக இல்லாமையால் அவள் சுலபமாகக் கையோடு வந்துவிடவே, அவன் அவளைத் தூக்கிக் கொண்டு அப்போதும் ஒசை செய்யாமல் விரல்களையே ஊன் றிய வண்ணம் நடந்து ஊஞ்சற் பலகைக்குப் பக்கத்து கஜ தூரத்திற்கு இப்புறம் கொண்டு வர, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து மெய்ம்மறந்திருந்த அந்தப் பெண்மணி திடுக்கிட்டுப் பெருத்த திகிலும், குழப்பமும் அடைந்து, "ஐயோ அம்மா எவனோ தூக்கு