பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 167

இறானே!" என்று வாய் குழறிக் கூறி அலற, ஒரே நொடியில் பொறித் தட்டுவதுபோல, அவளைக் கண்ணபிரான் இப்பால் கொண்டு வந்து முன் சொன்னபடி சுமார் 10-கஜ தூரத்திற் கொண்டு வர, அவள் அவனது பிடியில் அடங்காமல் தத்தளிக்க, கண்ணபிரான், 'அம்மா பயப்படாதே, வித்தியாசமான காரியம் ஒன்றுமில்லை! நான் கண்ணபிரான் வேறே யாருமில்லை” என்று அன்பாகவும், உருக்கமாகவும் கூறி அவளைத் தேற்றிய வண்ணம் கீழே விட, தன்னை அன்னிய புருஷன் தொடலா யிற்றே என்ற கோபமும் பதைப்பும் ஆக்கிரோஷமும் கொண்ட வளாகத் துடி துடித்திருந்த அப்பெண்மணி, தன்னை அவ்வாறு தூக்கியவன் கண்ணபிரான் என்பதை உணர்ந்தவுடன் மிகுந்த நாணமும் வெட்கமும் அடைந்தவளாய்த் தலைகுனிந்து நின்றா ளானாலும், அவளது விழிகள் கோவைப் பழம்போலச் சிவந்து மிகுந்த ஆத்திரத்தை அப்போதும் காட்டின. அவள், உடனே அவனை நோக்கி, 'புருஷர்களுக்கு எந்த விஷயத்திலும் பதற்றம் அதிகமென்று சொல்லுவார்கள். அது சரியாகப் போய்விட்டது. நாளைய தினம் நமக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறார்கள். இன்னமும் எட்டு நாட்களில் கலியாணம் நடக்கப் போகிறது. அதன் பிறகு நானே தங்களிடத்தில் வந்து சேரப் போகிறேன். அதற்குள் இவ்வளவு ஆத்திரமா? அப்படியே ஆத்திரம் இருந்தாலும், நான் தனியாக இருக்கிறதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் வருவதே தெரியாமல் திடீரென்று பின்னால் வந்து இப்படித்தானா என்னைத் துாக்கிக்கொண்டு வருகிறது? தங்களுடைய காரியம் நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே! இந்த ஒரு நிமிஷத்தில் என் மனம் எவ்வளவு பாடு பட்டு விட்டது எவ்வளவு திகிலடைந்து விட்டது! அடாடா! என்னுடைய உயிரே போய்விடும்போல் ஆகி விட்டதே! மக்ா புத்திசாலியான தாங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று இன்னமும் என் மனம் நம்பமாட்டேன் என்கிறதே! நம்முடைய பங்களா வில் எத்தனையோ ஜனங்கள் வந்து கூடியிருக்கிறார்கள். அவர்க ளுள் யாராவது இங்கே வந்து தாங்கள் என்னைத் துாக்கிக் கொண்டு வந்தபோது நம்மைப் பார்த்திருந்தால், என்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொள்வார்கள் என்பதை தாங் கள் எண்ணவில்லையே” என்று நிரம்பவும் அன்பாகக் கடிந்து கூறினாள்.