பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

1 - வது அதிகாரம் விநோதத் திருட்டு

லியாரே! நானும் எத்தனையோ ஊர்களைப் த நானு தத

பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தச் சென்னைப் பட்டணம் கெட்டதுபோல, இவ்வளவு அதிகமாக,

வேறே எந்த ஊரும் கெடவில்லை. ஐயா திருட்டு, புரட்டு, சூது, வாது, மோசம், நாசம், அநாசாரம், விபசாரம் முதலிய சகலமான அக்கிரமங்களும் இந்த ஊரிலே தான் உற்பத்தியாகின்றன. ஜாதி கிடையாது; சமயம் கிடையாது; நாணயமென்பது மருந்துக்கும் அகப்படாது. பணம், பணம், பணம் என்று பகலிலும் ராத்திரியிலும் தியானம் செய்து, அந்தப் பெரும் பேய்க்கே அடிமையாகி, ஈவிரக்கம், பச்சாதாபம், தயை, தாrணியம், தானம், தருமம் முதலிய நற்குணங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் இடங்கொடாமல், கேள்விமுறையில்லாமல், அவனவன் நினைத்தபடி அக்கிரமம் செய்கிறதும், கண்ணுக்கு எதிரிலேயே ஒருவனுடைய பொருளை இன்னொருவன் அபகரித்து விடுகிறதும், எப்படிப்பட்ட புத்திசாலிகளையும் ஒரு நொடியில் ஏமாற்றி விடுவதும், வேறே எந்த இடத்திலேயாவது நடக்கக்கூடிய விஷயங்களா? இன்றைய தினம் காலையில் சுமார் எட்டு மணி சமயத்தில் சைனா பஜார் தெருவில் ஒர் அக்கிரமம் நடந்திருக்கிறது! ஆகா! அதை என்னவென்று சொல்லுவேன்! இந்த ஊரில் அந்தத் தெருவிலே தான் ஜனங்கள் எப்போது பார்த்தாலும் தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்போல நிறைந்து, தேனடையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல இருப்பார்கள். அந்த இடத்துக்கு ஒர் அடி தூரத்திலே தான் போலிஸ் ஸ்டேஷன் இருக்கிறது; கடைக்குக் கடை செ.கோ.i-2