பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

செளந்தர கோகிலம்



சகிக்க முடியாத அமிர்தமான சுகத்தை உண்டாக்கித் தன்னைக் கொன்று கொண்டிருந்த அந்த யௌவனப் புருஷனது அழகு வழிந்த முகத்தை ஏறிட்டுப் பார்க்க வெட்கிய கோகிலாம்பாள் தனது முகத்தை மறுபடியும் திருப்ப முயல, அவன் 'கண்ணே! முகத்தைத் திருப்ப வேண்டாம். இனிமேல் நான் ஒன்றும் செய்கிறதில்லை. உன் முகத்தை அப்புறம் திருப்பிக் கொண் டால், பூர்ண சந்திரன் மறைந்ததுபோல, எனக்கு இந்த இட மெல்லாம் பாழ்த்துத் தோன்றுகிறது. கோகிலா! நீ இப்போது இங்கே வந்திருப்பாய் என்று நான் கனவில் கூட நினைக்க வில்லை. உன்னைப் பார்க்கப் போகிறோமா என்று நினைத்து ஏக்கங் கொண்டு இந்த இரண்டு தினங்களாக நான் பட்டுக் கொண்டிருந்த பாடு கடவுளுக்குத் தான் தெரிய வேண்டும். என்னுடைய உயிர் தாமரை இலைத் தண்ணிர்போல அப்படியே தத்தளித்துக் கொண்டிருந்தது. நீ மாத்திரம் இப்போது என் கண்ணில் பட்டிராவிட்டால், நாளைய காலையில் நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்துக்குள் என்னுடைய உயிர் இந்த உடலில் நின்றிருக்குமோ என்பது சந்தேகந்தான். அந்தச் சங்க தியைக் கவனித்தால், நீ இந்த இடத்திற்கு வந்ததே தெய்வ சங்கற்பத்தினால் ஏற்பட்ட பெருத்த பாக்கியமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், பாம்பு முதலிய துஷ்ட ஜெந்துக்கள் இருக்கக் கூடிய இப்படிப்பட்ட செடி கொடிகள் அடர்ந்த இடங்களுக்கு நீ இப்படித் தனியாக வந்து இருப்பது நிரம்பவும் அபாயகரமானது. இன்றையதினம் உன்னை தெய்வந்தான் காப்பாற்றி வைத்தது” என்று மிகுந்த வாஞ்சை யோடு உருக்கமாகப் பேசினான்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள், 'நாம் பாம்பில்லாத இடத்திலும் அபாயமில்லாத இடத்திலுமா இருக்கிறோம்? நாம் மூன்றாவது மாடத்தில் இருந்தால் கூட, பாம்பு அங்கேயும் வந்துவிடும். மனிதருடைய உயிரும் உடலும் எங்கெங்கே போகின்றனவோ, அங்கங்கே அவைகளின் நிழல்போல அபாய மும் கூடவே இருந்து வருகிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிறபடி, ஒரு மூச்சு ஒழுங்காக வராவிட்டால் உயிர் போய் விடும். மனிதப் பிறப்பே நிரம்பவும் அற்பமானது; இதற்கு இருக்கும் துன்பங்களும், அபாயங்களும் அவ்வளவு அதிகமாக