பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

செளந்தர கோகிலம்



யான அந்தப் பாம்பைத் தாங்கள் அடித்துக் கொன்றது கூட என் மனசுக்கு நிரம்பவும் கஷ்டமாகவே இருக்கிறது. தாங்கள் அதை அடித்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால் அப்படிச் செய்ய வேண்டாமென்று நான் தங்களிடத்தில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று கிள்ளை மொழிவது போல அழகாகப் பேசினாள்.

அவளது கல்வி முதிர்ச்சியையும் குணத்தழகையும் கண்டு ஆனந்த பரவசமுற்றுப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்த கண்ண பிரான் தனது மோகப் பெருக்கைத் தாங்க மாட்டாமல் அவளை அப்படியே ஒரு குழந்தையை வாரியெடுப்பதுபோல ஆவேசத் தோடு தூக்கி எடுத்து மார்போடு சேர்த்தனைத்து முகத்தோடு முகம் வைத்து அப்படியே கலங்கி மயங்கி ஆனந்த பாஷ்யம் சொரிந்து பேரின்ப நிலையில் சொக்கி நிற்க, அந்த மெல்லிய ளாள் அந்த மன்மத புருஷனால் விரிக்கப்பட்ட மோக வலைக் குட்பட்டு, அவனால் தொடுக்கப்பட்ட மோகனாஸ்திரங்களால் பிணைக்கப்பட்டு தடை கட்டப்பட்ட நாகம் போல அப்படியே கிடந்தாள். அவ்வாறு எவ்வளவு நேரமிருந்ததோ என்பதை அவர்கள் உணராதபடி அவர்கள் தங்களையும், உலகத்தையும், ஒயாமல் கழிந்து கொண்டிருந்த நாழிகையையும் மறந்து விவரிக்க சாத்தியமில்லாத அப்படிப்பட்ட பேரின்ப நிலைமையில் அவர்கள் இருக்க, அவர்களுக்குப் பின்புறத்தில் யாரோ இருந்து கணைத்துக் கொண்ட ஒசை, அவர்களது செவியில் படவே, அவர்கள் இருவரும் வேடனது குரலைக் கேட்ட மான்போலத் திடுக்கிட்டு மருண்டு, ஒருவரை யொருவர் விட்டுப் பிரிந்து சடக்கென்று எழுந்து விலகி நின்று திரும்பிப் பார்க்க நாலைந்து கஜ தூரத்திற்குப் பின்னாலிருந்து ஒரு மரத்தடியில் செளந்தர வல்லியம்மாள் வியப்பும் திகைப்பும் வடிவெடுத்தது போல மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு நின்றது தெரிந்தது.

தாங்கள் எதிர்பார்க்காதபடி அந்த இளைய நங்கை வந்து தங்களது செய்கைகளை எல்லாம் கண்டு கொண்டதை உணர்ந்த கண்ணபிரான் வெட்கித் தலைகுனிந்தான். கோகிலாம்பாளது அழகிய மேனி கிடுகிடென்று ஆடியது. ஏதோ பெருத்த குற்றம் செய்து விட்டவளது கை கால்கள் போல, அவளது கை கால்க