பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 477

ளெல்லாம் வெட வெடவென்று உதறுகின்றன. கண்கள் திருட்டு விழி விழிக்கின்றன. அதுகாறும் ஒவ்வொரு விஷயத்திலும் தனது தங்கைக்கு நற்புத்தியும் நன்னடத்தையும் சொல்லிப் பயிற்று வித்து, அவளை நடுக்குவித்து வந்த கோகிலாம்பாள் என்னும் நற்குணவதி அந்தச் சமயத்தில் தனது நடத்தை நிரம்பவும் ஆட்சேபகரமானது என்பதை நன்றாக உணர்ந்தவளாய்த் தனது தங்கையின் முகத்தில் விழிக்கவும் அஞ்சிக் கலங்கி கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் போவத் தனது மனோ திடத்தை எல்லாம் இழந்து வெட்கி நின்றாள். அவளது எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றியது. தான் தனது நியா யத்தை எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும், செளந்தர வல்லி திருப்தியடையாமல், தான் கண்ட ரகசியத்தை தனது தாய், வேலைக்காரிகள் முதலிய எல்லோரிடத்திலும் வெளிப் படுத்தித் தன்னை மிகுந்த அவமானத்திற்கும், தலை குனிவிற்கும் ஆளாக்கி விடுவாள் என்ற பெருத்த திகில் கோகிலாம்பாளது மனதில் தோன்றி, அவளை ஒர் ஆட்டுக்குட்டிபோல ஆக்கி விட்டது. அவளும் கண்ணபிரானும் அவ்வாறு வெட்கித்தலை குனிந்து நின்றதைக் கண்ட செளந்தரவல்லியின் துணிபும் அகங் காரமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. அவள் உடனே தனது அக்காளை நோக்கி அறுவறுப்பாகப் பேசத் தொடங்கி, 'பேஷ்! நன்றாக இருக்கிறது! படிக்கிறது. பகவத் கீதை; குடிக்கிறது குடக்கள் என்பதைப் போல இருக்கிறது இந்த நியாயம். அறவடித்த முன் சோறு கழனிர் பானையில் விழுந்து விடுமென்பது சரியாக இருக்கிறது. கோகிலா துர! இவ்வளவுதானா உன்னுடைய யோக்கியதை அன்றைய தினம் சமுத்திரக்கரையில் வந்த இவரைப் பார்த்து, நான் உபயோகமற்ற இரண்டு வார்த்தைகள் சொன்னதற்கு, நீ என்னைக் கண்டித்து, எனக்கு ஒன்றரை மைல் நீளம் உபதேசம் படித்தாய். நீ என்ன வரவர இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாய்? வழியில் போகிற மனிதர் களை எல்லாம் நம்மைப்போல இருக்கிற கன்னிகா ஸ்திரிகள் ஏறிட்டுப் பார்ப்பதே முதலில் தப்பான காரியம் என்று நீ அன்றைய தினமே எனக்கு ஹிதோபதேசம் செய்தாயே. நம்மைப் போல என்ற அந்த வார்த்தைக்குள் நீ அடங்கினவ ளல்லவா? அல்லது, வழியில் போகிற இந்த மனிதரை இப்படித் செ.கோ.1-13