பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

செளந்தர கோகிலம்



தனியாகச் சோலைக்குள் அழைத்துக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு கட்டிப் புரள வேண்டுமன்றி, ஏறிட்டுப் பார்த்தது மாத்திரம் கூடாதென்று சொன்னாயா? அல்லது, உன்னுடைய ஆசையெல்லாம் இவர்மேல் விழுந்து விட்டதனால் இவரைப் பற்றி நான் வாயாலும் குறித்துப் பேசக் கூடாதென்ற நினைவினால் அப்படிச் சொன்னாயா? அல்லது நாளைய தினம் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறதைக் கருதி, நீ கன்னிகா ஸ்திரீ என்ற வகுப்பிலிருந்து கலியாணமானவளாக மாறிவிட்டாயென்ற எண்ணமா? நான் கட்டிலில் உட்கார்ந்தால் அது தப்பு; கிழக்கு முகமாய்த் திரும்பினால் அது தப்பு: தும்பினால் இரும்பினால் கூட அதுவும் தப்பு; நீ எதைச் சொன்னாலும் அதை நம்முடைய அம்மாளும் கேட்டுக்கொண்டு ஆடுகிறது; தொட்டதற்கெல்லாம் என்னைக் கண்டித்து எனக்குப் புத்தி சொல்கிறது! நீ இப்படிப்பட்ட காரியம் செய்கிறாயே, உன்னை யார் கேட்கிறது? நம்முடைய பங்களாவில் நூற்றுக் கணக்கில் மனிதர்கள் வந்து கூடி இருக்கிறார்கள். அப்படி இருக்க மனதில் கொஞ்சம் கூட பயமில்லாமல் இவரை இங்கே அனுப்பிவிட்டு, நீயும் எவருக்கும் தெரியாமல் இங்கே வந்து இப்படிப்பட்ட காரியம் செய்து கொண்டிருக்கிறாயே! நானும் அரை நாழிகை நேரமாக இங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னைப்போல அன்னி யர் யாராவது இப்படி வந்து நின்று பார்த்துக் கொண்டிருந் தாலும், நீங்கள் அப்போதும் இப்படித்தானே பூலோகமோ, கைலாசமோ என்று மயங்கிக் கிடப்பீர்கள். நல்ல வேளையாக நான் இன்னும் கொஞ்சம் முன்னால் வராமல் போனேன். அப்படி வந்திருந்தால் நீங்கள் செய்த மற்ற எல்லாக் காரியங்க ளையும் நான் பார்க்கும்படியாக இருந்திருக்கும். இந்தக் காட்டில் கோவணம் கட்டாமல் திரியும் மிருகங்களுடைய காரியத்திற்கும், உங்களுடைய காரியத்திற்கும் பேதம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நான் இங்கே வந்து, நீங்கள் இப்படி இருந்ததைக் கண்டவுடனே, எனக்குண்டான ஆத்திரத்தில் உடனே பங்களாவுக்கு ஒடி, அங்கே கூடியிருக்கும் ஜனங்கள் எல் லோரையும் அழைத்துக் கொண்டு வந்து உங்கள் இருவரையும் பார்க்கச் செய்து, அவர்களுடைய தயவில்லாமல், நீங்களே ருது