பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

செளந்தர கோகிலம்



போலீஸ் புலிகள் மீசைகளை முறுக்கி விட்டுக் கொண்டு கையும் தடியுமாக நின்று கொண்டிருக்கிறார்கள். எல்லாருடைய கண்ணுக்கும் எதிரில் பட்டப்பகலில் இவ்வளவு பெரிய காரியம் நடந்திருக்கிறதே! இந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்லு கிறது!’ என்று டிராம் வண்டியில் போய்க்கொண்டிருந்த ஒரு நாயுடு, தமக்கெதிரில் உட்கார்ந்திருந்த ஒரு முதலியாரைப் பார்த்து மிகுந்த வியப்போடு கூறினார்.

அதைக் கேட்ட முதலியார் தமது வாயில் வைத்திருந்த சுருட்டை அப்புறம் இப்புறம் திருப்பி, அதன் முனையிலிருந்த சாம்பலைத் தமது சுண்டுவிரலின் நகத்தால் தட்டிவிட்டு, புப், புப், என்று இரண்டு முறை இழுத்தபின் சுருட்டைக் கையி லெடுத்துக் கொண்டு, நிதானமாகப் புகையை வெளியில் விடுத்த வராய் நாயுடுவை நோக்கி அலட்சியமாகப் பேசத் தொடங்கி, 'ஆமைய்யா நீர் பேசுவீர். ஊரை அடித்து உலையில் போடுவது போல, ஏழை ஜனங்களுடைய வரிப்பணத்தையெல்லாம் பிடுங்கி, இந்த கவர்ன்மெண்டு ஆபீசில் மாதம் பிறந்தால் உமக்கு இருநூறு முன்னுாறு சம்பளம் கொடுத்து விடுகிறார்கள். உமக்கு என்ன கஷ்டம் தெரியப்போகிறது! உமக்குக் கொடுக்கிறதுபோல, ஒவ்வொருவனுக்கும் யாராவது பணங் கொடுத்துக் கொண்டி ருந்தால், ஒருத்தனும் திருடவும் மாட்டான்; உம்மைப் போலவே ஒவ்வொருத்தனும் மற்றவர்களுக்கு நீதி போதித்துக் கொண்டுதான் இருப்பான். போமையா போம். இதெல்லாம் என்ன பேச்சு ஊரினுடைய நிலையைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிற பேச்சு உப்புக்காகுமா புளிக்காகுமா ஜனங்கள் பிழைக்க மாட்டாமல் தத்தளிக்கிறார்கள். பணம் இருக்கிற இடமோ தெரியவில்லை. மனிதன் தனக்கு வேண்டிய சோற்றுக்கும் துணிக்கும் பணம் செலவழிப்பதன்றி, அவன் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்றுக்கும், குடிக்கும் தண்ணிருக்கும், நடக்கும் பாதைக்கும்கூட பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. ரூபாய் ஒன்றுக்கு இரண்டரைப் படி அரிசி கிடைப்பது கூட அருமையாக இருக்கிறது. மனிதன் எந்தப்பக்கம் திரும்பினாலும் பணத்தை நீட்டிக் கொண்டே திரும்பவேண்டி இருக்கிறது. இதற்குமுன் ஒரு ரூபாய் கொடுத்த சங்கதிக்கு இப்போது மூன்று ரூபாய் கொடுத்தாலும் ஒன்றுக்குப் பாதிதான் கிடைக்கிறது. குழந்தை குட்டிகளோ வஞ்சனையில்லாமல் பிறந்துகொண்டே இருக்கி