பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

செளந்தர கோகிலம்



புருஷருடைய மடியில் சாய்ந்திருக்கவில்லையே. அவளுக்குப் புருஷனாக ஏற்படுத்தப்பட்ட மனிதனுடைய மடியிலேதான் சாய்ந்திருந்தாள். இந்த விஷயமும் ஒரு பெரிய குற்றமாக உன் மனசுக்குப் பட்டால், “ஏன் அக்கா இப்படி செய்யலாமா?" என்று நீ கேட்க உனக்குப் பூர்த்தியான அதிகாரமிருக்கிறது. உடனே நாங்களும் உன் மனம் திருப்தியடையும்படியான சமாதானம் சொல்லக் காத்திருக்கிறோம். உன்னுடைய அக்காளோடு நான் இங்கே இருந்ததைப் பற்றி இப்போது நீ இவ்வளவு தூரம் வருத்தப்பட்டுக் கொள்ளுகிறாயே. நான் மாத்திரம் இப்போது இங்கே வந்திராவிட்டால் உன்னுடைய அக்காளை நீ உயிரோடு பார்த்திருக்கவே மாட்டாய். அப்போது நீ உன் அக்காளுக்காக அடித்துக்கொண்டு ஒலமிட்டு அழ மாட் டாயா! அதோ அந்த ஊஞ்சல் பலகைக்குப் பக்கத்தில் என்ன கிடக்கிறது என்பதை முதலில் பார்த்துவிட்டு வா; அதன் பிறகு உனக்கு எல்லா விஷயமும் உடனே விளங்கிப்போம். நான் இங்கே வந்து செய்த காரியத்தைப் பற்றி நீ நிரம்பவும் சந் தோஷப்படுவாய்” என்று அவளது மனது திரும்பும்படி பக்குவ மாகப் பேசி, ஊஞ்சல் பலகையண்டை மாண்டு கிடந்த நாகப் பாம்பைக் காட்ட, அவனது வார்த்தைகளை முற்றிலும் அவ நம்பிக்கையாகவும், அதிருப்தியாகவும் கேட்டுவந்த செளந்தர வல்லியம்மாள் மெதுவாகத் தனது முகத்தைத் திருப்பி ஊஞ்சற் பலகையண்டை பார்க்க, அங்கே கிடந்த அதிபயங்கரமான நாகப் பாம்பின் உடல் தென்பட்டது. அதைக் கண்டு திடுக்கிட்டு, 'ஐயோ! பாம்பல்லவா உயிரோடா இருக்கிறது?’ என்று கூறித் துள்ளிப் பின்புறத்தில் இரண்டோரடிக்கு அப்பால் குதிக்க, அவ்விடத்தில் நின்ற கண்ணபிரான் மீது அவள் தேகம் பட்டது. அவன் அவளை மிகுந்த அன்போடு பிடித்து நிற்க வைத்துவிட்டு, அப்பால் நகர்ந்து கொண்டான். செளந்தரவல்லி மிகுந்த கலக்கமும், பயமும் பலவகையான சந்தேகங்களும் கொண்ட வளாய் அவர்கள் இருவரது முகங்களையும் உற்று நோக்கினாள். சிறிது நேரத்திற்கு முன் அங்கே நடந்த சம்பவத்தின் விவரத்தை அறிந்து கொள்ள ஆவல் கொண்டவளாய் அவள் அவ்வாறு பார்க்கிறாள் என்பதைக் கண்டு கொண்ட கண்ணபிரான் நிரம்பவும் வாத்சல்யத்தோடு பேசத் தொடங்கி, 'குழந்தாய்