பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 187

தாளே என்ற ஆனந்த பரவசத்தினால், என்னை மறந்து நான் இவளை ஒரு குழந்தைபோல மதித்து ஆசையோடு ஒருதரம் ஆலிங்கனம் செய்து கொண்டேன். உடனே நீயும் வந்தாய்; இது தான் நடந்த சங்கதி. இவள் என் மடியின் மேல் சாய்ந்திருந்தது வரையில் நாங்கள் வேண்டுமென்று செய்த காரியமல்ல. அது இந்த அபாயத்தைக் கருதி எவரும் செய்யக்கூடிய தற்செயலான விஷயம், இவளை நான் ஆசையோடு கட்டித் தழுவியது. ஒன்று தான் நான் வேண்டுமென்று செய்தது. அந்த விஷயத்திலும் உன் னுடைய அக்காளின் மேல் எள்ளளவும் குற்றம் சொல்ல முடி யாது; அவளுக்கு இப்படிப்பட்ட அவமானம் உண்டானதற்கு நானே காரணமானவன். ஆகையால், நீ எவ்வளவு தூரம் கோபித்துக் கொள்ள வேண்டுமானாலும் என்னைத்தான் கோபித்துக் கொள்ள வேண்டுமன்றி, உன்னுடைய அக்காளைக் கோபித்துக் கொள்வது கொஞ்சமும் நியாயமான காரியமல்ல. நான் செய்த குற்றத்திற்காக நீ என்னை அடித்தாலும் நான் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். கடைசியில் நீ யார்? என்னுடைய மச்சினிச்சிதானே' என்று வேடிக்கைபோல அலட்சியமாகவும் நயமாகவும் பேசி புன்னகை செய்தான்.

அதைக் கேட்ட செளந்தரவல்லி மிகுந்த பொறாமையி னாலும், அகங்காரத்தினாலும் தனது நல்ல அறிவை இழந்தவ ளாய், அவன் சொன்ன வரலாற்றை நம்பாமல் மறுபடியும் குத்தலாகவே பேசத் தொடங்கி, 'இவ்வளவு தானா சங்கதி: இதற்குத்தானா என்னை நிற்கச் சொன்னது? கேழ்வரகில் நெய் ஒழுகுகிறதென்றால் கேட்போருக்கு மதி எங்கே போய்விட்ட தென்று வசனம் சொல்லுவார்கள். அதுபோல இருக்கிறது. நீங்கள் சொல்வது; நான் சென்ற அரை நாழிகை நேரமாக இங்கே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் முத்தமிட்டுக் கொண்டதும், முகத்தோடு முகம் வைத்து மயங்கிக் கிடந்ததும், அடிக்கடி ஆசையோடு கட்டிக்கொண்டதும், எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அப்படி இருக்க இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பதுபோல இருக்கிறது. ஏற்கனவே தானாக செத்துப் போய்க் கிடக்கும் ஒரு பாம்பின் மேல் சாக்கைப் போட்டுவிட்டு, நீங்கள் நல்ல காரியம் செய்தீர்கள். பாம்பைக் கண்டு அக்காள் மூர்ச்சித்திருந்தாள், பிறர்