பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 3

றார்கள். ஜனங்கள் சாகவும் மாட்டாமல் பிழைக்கவும் மாட்டாமல் தவிக்கிறார்கள். அவர்கள் நியாயமான வழியில் சம்பாதிக்கிற சம்பாத்தியம் கால் வயிற்றுக்குக்கூட வருகிற தில்லை. அப்படியிருக்க, திருடாமலும், பொய் சொல்லாமலும், மோசம் செய்யாமலும் வேறே எப்படித்தான் காலrேபம் செய்கிறது!’ என்று மிகுந்த ஆத்திரத்தோடு பேசினார்.

அதைக் கேட்ட நாயுடு, முதலியாரைப் புரளி செய்பவர் போல, வார்த்தைகளை நீட்டி நீட்டிப் பேசத் தொடங்கி, "அப்படியா முதலியார் சொன்னது நூற்றில் ஒரு பேச்சு! ஜனங்களெல்லாரும் பிழைக்க மாட்டாமல் தவிக்கிறார்களோ!! ஒவ்வொருவனும் செய்கிற அநாவசியச் செலவுகளைப் பார்த்தால், ஜனங்கள் தவிக்கிறதாக யாரும் சொல்லவே மாட்டார்கள். இந்த ஊருக்குள் 15-நாடகக் கொட்டகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும், தினமொன்றுக்கு ஆயிரம் ஆயிரத்தைன்னுாறு ரூபாய் வசூலாகிறது! பயாஸ்கோப் நடக்கும் இடங்கள் சுமார் 7, 8 இருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றிலும் தினம் இரண்டு, அல்லது மூன்று காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒரு நாளைக்குச் சுமார் ஆயிரம் ரூபாய் வசூலாகிறது. அதுவும் தவிர, இந்த ஊரில் வேசிகளும், தாசி களும், சுமார் இருபதினாயிரம் பேர் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் நாளொன்றுக்கு ரூபாய் ஐந்து முதல் இருபது வரையில் வருமானம் கிடைக்கலாம். இன்னம் சூதாடும் இடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவைகளில் ஒவ்வொரு தினத்திலும் கையாளப்படும் பணத் தொகையோ கணக்கில் அடங்காததாக இருக்கிறது. சிவில் கோர்ட்டுகளிலும், மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிகளிலும், மிட்டாய்க் கடைகளிலும், கள்ளு சாராயக் கடைகளிலும் வெள்ளைக்காரர்களுடைய கம்பெனிகளிலும், ஒவ்வொரு நாளிலும் செலுத்தப்படும் கப்பப் பணத் தொகைகளை ஒர் ஆற்றின் ஜலத்துக்கு சமமாகச் சொல்லலாம். இப்படியெல்லாம் நூற்றுக்கணக்கான கெட்ட வழிகளில் ஒவ்வொரு நாளும் இந்த ஊரிலுள்ள ஜனங்களால் அநாவசியமாக அழிக்கப்படும் பணத் தொகைகளைக் கணக்கிட்டால், அது எத்தனையோ லக்ஷக்கணக்கில் ஆகும். அப்படி இருக்க, ஜனங்கள் பிழைக்க மாட்டாமல் தவிக்கிறார்கள்