பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 193

பலவாறாக விகாரப்பட்டிருக்கிறதே எனக் கண்ணபிரான் மிகுந்த வியப்பும் திகைப்பும் கொள்ளலானான்.

கோகிலாம்பாள், தனது தாய் தன் சொல்லையே நம்புவாள் என்றும், தனது தங்கையின் வார்த்தையைச் சிறிதும் மதிக்க மாட்டாள் எனக் கடைசியில் உறுதி கூறிவிட்டுப் போனாள். ஆனாலும், செளந்தரவல்லியம்மாள் தனது அறியாமையினாலும், பொறாமைக் குணத்தினாலும், பங்களாவில் வந்து கூடியிருக்கும் ஜனங்களிடத்தில் தாறுமாறாக ஏதேனும் உளறி, அதனால் ஏதேனும் சங்கடத்தையும், எதிர்பார்க்காத துன்பத்தையும் உண்டாக்கி வைத்து விடுவாளோ என்ற கவலையும், தான் போய் தனது தாய், மாமியார் ஆகிய இருவரது முகங்களிலும் எப்படி விழிப்பதென்ற வஜ்ஜையும் தோன்றி அவனது காலைப் பின்னுக்கு இழுத்தன. ஆகையால் அவன் பங்களாவிற்கே போகாமல், இரவு ஏழரை மணி நேரம் வரையில் பங்களா விற்குப் பக்கத்திலிருந்த தென்னை மரங்களினடியில் உலாவிக் கொண்டே இருந்தான். அத்தனை சஞ்சலங்களினிடையில், கோகிலாம்பாள், நிச்சயதார்த்த தினத்திற்கு மறுநாள் மூன்றாவது மாடியில் தன்னோடு நெடுநேரம் வரையில் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவதாகவும், தான் தவறாமல் வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டுப் போனபோனது, மரணதண்டனை பெறப் போனவனுக்கு நூறாயுளும் மகராஜனது பதவியும் கிடைத்தால், அவனது மனத்தில் எவ்வளவு பிரமாதமான களிப்பும், குது.ாகலமும் அனந்த பரவசமும் உண்டாகுமோ அதைக் காட்டிலும், ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷமும் உற்சா கமும் கண்ணபிரானது மனத்தில் தோன்றி, அவனது உள்ளத்தில் புதிய ஊக்கமும், புதிய பலமும், புதிய எண்ணங்களும் பெருகி, அவன் மானளவீகமான நவரத்னக் கோட்டை கட்டி அதிலேயே லயித்திருக்கும்படிச் செய்தன. அவ்வாறு, அந்தப் புதிய மண வாளன் இன்பத்தினாலும், துன்பத்தினாலும், சந்தோஷத்தி னாலும், பூரிப்பினாலும், வாட்டத்தினாலும், தளர்வினாலும் மாறி மாறி உலப்பப்பட்டவனாய், கட்டிடங்களின் பக்கத்தி லிருந்த தென்னந்தோப்பில் உலாவி நிற்க, மணி எட்டிற்கு மேலாகி விட்டது, அன்றைய தினம் ஏற்படுத்தப்பட்டிருந்த விருந்தை உண்பதற்காக எல்லோரும் இலையில் உட்கார்ந்து விட்டனர். செ.கோ.1-14