பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் i89

முதலிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தாள். இவளது பாடல் ஒவ்வொன்றும் முடிந்தவுடனே தங்க நாகசுரக்காரன் அதே பாட்டைத் தனது வாத்தியத்தில் இனிமையாக வாசித்து வாசித்து நிறுத்த, அவர்கள் இருவரும் தத்தம் சங்கீதமே அதிக இனிமையாக இருக்க வேண்டுமென நினைத்துப் போட்டிபோட முயல்பவர் போலத் தங்களது முழுத் திறமையையும் புலப்படுத்தி இன்பத்தையும், இனிமையையும் அள்ளி Thர் ஜிலீரென்று வீசிக் கொண்டிருந்தனர். புஷ்பாவதி அதுவரையில் எவரும் கேட்டிராத புதிய வர்ணமெட்டுகளில் பாடல்களை எடுத்துத் தனக்குச் சமமாக அந்த நாகசுரக்காரன் பாட முடியாமல் செய்து விட வேண்டுமென்ற எண்ணத்தோடு அதியற்புதமாகப் பாடி யதைக் கேட்ட பெண்டிர் யாவரும் பிரமித்து வியப்படைந்து ஆனந்த பரவசம் எய்தி, அவள் ஊர்வசியோ, மேனகையோ, அல்லது கலைவாணியோ என்று தமக்குள் நிரம்பவும் புகழ்ச்சி யாகப் பேசிக் கொண்டனர்.

அவ்வாறு அந்த மண்டபம், அப்ஸர ஸ்திரீகளுக்கும் கந்தருவ ஸ்திரீகளுக்கும் மத்தியில் ரம்பை, திலோத்தமை முதலிய தேவதாசிகள் தெய்வகீதம் பாட, மகாலக்ஷமி கொலுவீற்றிருந்த சுவர்க்கலோகம் போலத் தோன்ற, கோகிலாம்பாள் என்னும் மடவன்னத்திற்கு நலங்கு நிறைவேற, முடிவில் திருஷ்டி பரிகாரத்தின்பொருட்டு இளந்தோகையர் இருவர் ஆரத்தி எடுத்து அழகாகக் குனிந்து நின்று அதை மெதுவாகச் சுழற்றி ஒரு பாட்டைத் துவக்கிப் பாட ஆரம்பித்தனர். அப்போது வேறு எவ்வித ஒசையுமின்றி அந்த மண்டபம் நிசப்தமாக இருந்தது, அந்த மடந்தையர் பல்லவி பாடி, அநுபவல்லவியை எடுத்து மனதை ரஞ்சிகச் செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு பெருத்த கூக்குரல் உண்டாயிற்று. அந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைப் பந்தலிலிருந்த ஆண்பாலர் யாவரும் பெருத்த ஆரவாரம் செய்து ஓங்கிய குரலில் ஏதோ சண்டையிட்டுக் கொள்வதாகத் தெரிந்தது. அந்த ஆரவாரம் படிப்படியாகப் பரவி அதிகரித்துத் தோன்றியது. அதைக் கேட்ட சில ஸ்திரீகள், "அது என்ன ஆரவாரம்? கொட் டகைப் பந்தலில் பெருத்த அமர்க்களமாக இருக்கிறதே!” என்று வியப்போடு கூற, அதைக்கேட்ட மற்ற மகளிரது கவனமும் அந்தக்