பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

செளந்தர கோகிலம்



கூக்குரலில் சென்றது. உடனே அவர்கள் எல்லாரும் வேடனது காலடியோசையைக் கேட்ட மான்களின் கூட்டம்போல அஞ்சி மருண்டு, வியப்பும், திகிலும், நடுக்கமும் அடைந்தவராய், இரண்டொரு நிமிஷநேரம் ஸ்தம்பித்து சித்திரப் பாவைகள் போல அசைவும், பேச்சு மூச்சும் அற்று அப்படி அப்படியே முட்டு முட்டாக உட்கார்ந்திருந்தனர். அடுத்த நிமிஷத்தில், "அம்மா அம்மா!' என்று கூப்பிட்டுக்கொண்டு யாரோ சிலர் அந்த மண்டபத்தை நோக்கி திடுதிடென்று ஓடிவந்த ஒசையுண் டாயிற்று. அந்த வார்த்தை ஒவ்வொருவரது மனதிலும் ஈட்டி போலப் பாய்ந்து சகிக்கவொண்ணாத திகிலையும் நடுக்கத் தையும் உண்டாக்கியது. யார் அப்படி ஒடி வருகிறார்களென் பதையும், என்ன காரணத்தினால் அப்படிக் கூவிக்கொண்டு ஒடி வருகிறார்கள் என்பதையும் அறிய மிகுந்த ஆவல் கொண்ட வராய், வாசற்படியில் தங்களது விழியை வைத்தவராக எல் லோரும் இருந்தனர். அடுத்த நிமிஷத்தில், நாலைந்து வேலைக் காரர்கள் அந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்து, நிரம்பவும் பதைப்பாக நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்துப் பூஞ்சோலை யம்மாள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, அந்த அம்மாளை நோக்கி, 'அம்மா பந்தலில் அமர்க்களம் நடக்கிறது. பெருத்த சண்டை, புதுமாப்பிள்ளை போய்விடுவார் போலிருக்கிறது” என்று கூறி வாய் மூடுமுன், ஏதோ சண்டை நடந்ததனால் புது மாப்பிள்ளையான கண்ணபிரான் இறந்து போகும் தருணத்தில் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்ட பெண்டீர் அனை வரும், ஹா புதுமாப்பிள்ளையா!' என்று அதிக வியப்போடு கேட்டுக்கொண்டு குபிரென்று எழுந்தனர்; மனையின்மீது உட்கார்ந்திருந்த கோகிலாம்பாளது செவியில் அந்த வார்த்தை விழுந்தது உருக்கிய நாராசத்தை வார்த்ததுபோல இருந்ததன்றி, அவளது உயிர் துடி துடித்துத் தள்ளாடியது. அவளும் சடக் கென்று எழுந்தாள். பூஞ்சோலையம்மாள், கற்பகவல்லியம்மாள் முதலியோரது மன நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்வதே எளிதன்றி விவரித்துச் சொல்வது சாத்திய மில்லா விஷயம். அங்கே கூடியிருந்த பெண்டீரில் ஒருத்தியும் மிகுதியில்லாமல் எல்லோரும் பெருத்த வியப்பும், திகைப்பும், குலை நடுக்கமும், திகிலும் அடைந்து கொட்டகைப் பந்தலில்