பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 2C1

என்ன விபரீதம் நடந்தது என்பதை அறிய ஆவல் கொண்ட வளாய், விழுந்தடித்துக் கொண்டு அந்த மண்டபத்தின் பல வாயில்களிலும் புகுந்து வெளியில் ஒடினர். எண்ணிறந்த ஆண்பிள்ளைகள் கூடிய இடமான கொட்டகைப் பந்தலிற்குத் தாங்கள் போகக்கூடாது என்ற நானமெல்லாம் பறந்து போய் விட்டது. பெண்டீர் அனைவரும் தங்களது தேகத்தை மறந்து பதறி ஓட்டமாக ஒடிக் கொட்டகைப் பந்தலிற்குள் நுழைந்தனர். அதன் வாசல் அத்தனை ஸ்திரீகளும் புகுவதற்கு இடம் கொடாமையால், பெரும்பாலோர் அந்தப் பந்தலின் பக்க அடைப்புகளிலிருந்து கீற்றைப் பிரித்துவிட்டு அதன் வழியாக உட்புறத்தில் நோக்கலாயினர். அவர்களது முகங்களெல்லாம் மிகுந்த கவலையையும், குழப்பத்தையும், திகைப்பையும் தோற்று வித்தன. அவ்வாறு வந்த ஒவ்வொருவரும் தத்தமக்கு அருகில் நின்ற ஆண்பிள்ளையைப் பார்த்து, என்ன கலகமென்றும், மாப்பிள்ளை எங்கே என்றும் ஆவலோடு விசாரித்தனர். கொட்டகைப் பந்தலிலிருந்த ஜனங்கள் எல்லோரும் எழுந்து திரண்டு கூட்டமாக நின்றனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் நாலைந்து போலீஸ் ஜவான்களும், ஒர் இன்ஸ்பெக்டரும் நின்று கூட்டத்தில் மறைந்திருந்த யாரோ ஒருவருக்குக் கை விலங்கு மாட்டிப் பிடித்துக் கொண்டிருந்தனர். கலியாணத்திற்கு வந்திருந்த விருந்தினரில் நாலைந்து யெளவனப் புருஷர்கள் அந்தப் போலீசார் வெளியில் போவதை தடுத்து அவர்களைத் தாறுமாறாக வைது அடிக்கவும் குத்தவும் முயன்று கொண்டி ருந்தனர். போலீசார் கத்தி துப்பாக்கி முதிய ஆயுதங்கள் எதுவும் கொண்டுவராமல் இருந்தனர். ஆதலால், அவர்கள் நயமாகப் பணிந்து பேசித் தங்களது நியாயத்தை எடுத்துச் சொல்லித் தங்களை அடிக்க வருவோரை எல்லாம் சாந்தப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். கும்பவின் பல பாகங்களிலிருந்தும் பெரும் பாலோர் ஆரவாரம் செய்து, "போலீஸ் நாய்களை விடாதே யுங்கள். நன்றாக மொத்தியனுப்புங்கள்’ என்று கூறிய வார்த்தை கள் கேட்டன. வேறு பலர், “போலீசாரைத் தொடாதீர்கள். கையை நீட்டினால், அதிலிருந்து கெடுதல் வந்து சேரும். நியாயமாகவே கேளுங்கள் என்று இடையில் தடுத்தனர். போலீசாருக்குச் சமீபத்தில் நின்று அவர்களை வைதவர்களுள்